26. உற்றாருயி ருண்ணிய வெண்ணியனும் ஒற்றாடிட வுற்றவ வொற்றர்களைப் பெற்றோர்பெறு பி்ள்ளையை வெல்லவருஞ் செற்றோரிடை சேர்ப்பன செய்தனனே. 27. நடைமேவிய நற்றமி ழொற்றர்களை வடவாரிய மள்ளரி ராமனிடம் விடவேயவன் வேவு பெறாதகலக் கடவீரென வீடு கடத்தினனே. 28. அன்னார்தமை விட்டபி னாரியனும் பொன்னோடு பொருது பொலம்பெயர மின்னோடிகல் வென்றிகொள் தொன்னகரை முன்னாடியே முற்றிட முன்னினனே. 29. நால்வாய்களு நண்ணிடு தற்கரிய நால்வாய்களு நண்ணிடு தற்குரிய பால்வாய்தக வேபடை பண்ணிடவே நூல்வாய்தக வோர்க்கு நுவன்றனனே. 30. மற்றோர்கரி யேமுதல் மாப்படையைக் கற்றாங்கு கணிக்க வகைப்படவே விற்றாங்கி யெழுந்தனர் மேவலரும் முற்றாக முனைப்பொடு சென்றனரே. 31. இவ்வாறவர் முற்றிட வேகிடவே ஒவ்வாத துணிந்துய ரூரணுகும் தெவ்வோர்செய லாய்ந்து செருப்புகலும் செவ்வேலிறை செய்தி யதைத்தெளிவாம். | கலி விருத்தம் | 32. உடன்பி றந்தின் னுயிர்கொலு நோயென உடன்பி றந்தோ னுயிர்கொல வாரியன் உடன்பி றந்த வுளவனா வுள்ளவன் உடன்பி றந்ததை யோர்ந்தங் கிராவணன். ------------------------------------------------------------------------------------------- 27. வேவு - உளவு. வீடு கடத்தினன் - விட்டனன். வீடு - பாடி வீடுமாம். 28. பொலம் - அழகு, ஒளி. முன்னினன் - எண்ணினான். 29. நால் வாய் - யானை. நால்வாய் - நாற்புறவாயில். பால் வாய்தக - தகுதியாக. நூல் - படைநூல். 31. செருப்புகலும் - போரை விரும்பும். | |
|
|