33. மின்னு டன்வெடி மேவுதல் போலிவன் என்னு டன்பிறந் தானினி யென்பயன் உன்னி யுன்னி யொழிப்பது வேதக வென்ன மன்னவ னெண்ணி யிருக்கையில். 34. பாடி விட்டுப் பறந்து பறவையின் ஓடி வந்து பணிந்துமே யொற்றர்கள் கேடு கெட்ட விளையவன் கெட்டனன் கூட விட்டுக் கொடுமைகள் செய்தனன். 35. தாரை முற்றித் தழைத்துயர் மார்பநம் ஊரை முற்ற வொழுங்கு படுத்திய ஆரி யப்படை யண்ணிய தென்னவே பூரி யர்க்குயிர் போயது போலுமே. 36. என்று மன்ன னிகலி யெரிசினங் கன்றி யேபொறி காலக் கடிதினிற் சென்று நீவிருஞ் சேனைத் தலைவரை ஒன்ற வீங்குரைப் பீரென வோடினர். 37. அன்னர் சென்றங் கரும்படை யாளரைத் துன்னி மன்னவன் சொன்னது சொல்லவும் மின்னி னின்றொளி மேவுமுன் சென்றிறை தன்னை யுற்றனர் தானைத் தலைவரே. 38. தொழுது நின்ற தொகுபடை யாளரைப் பழுதி லாது படையொடு சென்றுநீர் எழுது மாட மியன்றுயர் வாய்தொறும் விழுது போல விறலொடு காக்குவிர். 39. மன்னு மாண்மை மதின்முடி தன்னினும் பின்னு மாழ்ந்த பெரிய கிடங்கினும் மின்னு மூசி யிலைய மிளையினும் துன்னி டாது துதைந்துமே காக்குவிர். 40. சிதலை கொற்ற ரிரும்பினைத் தின்னவே சிதலை யுற்றொரு கோடி திரண்டபோல் மதிலை முற்றுற வாரியர் வண்டமிழ் மதலை பெற்று வழிவரு கின்றராம். ------------------------------------------------------------------------------------------- 33. வெடி - இடி. 39. மிளை - காவற்காடு. துதைதல் - செறிதல். 40. சிதலை - கறையான். கொல்தரு இரும்பு - கெட்டியான இரும்பு. ஒன்று தி்ன்னப் பலதிரண்டு வருதல்போல். மதலை - துணை. | |
|
|