பரிந்துரைகள் | காஞ்சி மணிமொழியார் அவர்கள் | ழுஅலையே அடங்கு!ழு ழுகடல் அலையே அடங்கு!ழு என ஆணை யிட்டான், பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்தை ஆண்ட ‘கான்யூட்’ என்னும் மன்னன். அலை அடங்கிற்றா? இல்லை. அலையின் இயல்பு ஓயாது விளையாடிக்கொண்டு இருப்பது என்பதை அவன் அறியான். மன்னன் கான்யூட் மடைமையின் உருவம்! எனவேதான் அலையை அடக்க முடியுமென நம்பினான்; பிறர் முன்னிலையில் சபதமும் கூறினான்; இறுதியில் பிறர் கேலிக்கு ஆளானான். அதுமட்டுமா, வரலாற்றுச் சுவடியிலே என்றும் அழியாததோர் இடம் பெற்றுவிட்டான் மரமண்டை படைத்த மன்னன் என்ற முறையில். கான்யூட்டுக்கள் அந்தக் காலத்தில் மட்டுந்தான் உண்டு என்பதி்ல்லை. இந்தக் காலத்திலும் உண்டு. சென்னைத் தேசிய அரசினர் 2-6-48ஆம் நாள் ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்கள் - விபரீதமான உத்தரவு. மிக மிக விசித்திரமான உத்தரவுங்கூட, மன்னன் கான்யூட் பிறப்பித்த உத்தரவுகூட அவ்வளவு வேடிக்கையானதன்று. ஆனால், சென்னை அரசின் 2-6-48ஆம் நாளிட்ட உத்தரவு உண்மையிலேயே வேடிக்கையானது. மறைந்த மன்னன் கான்யூட், இந்நாள், கல்லறையிலிருந்து வெளியே வரமுடியுமானால், அவன்கூடக் கண்டு நகைக்கக்கூடிய அளவுக்குக் கோமாளித்தனம் நிரம்பிய உத்தரவு. கான்யூட், கடல் அலையே அடங்கு என்று ஆணையிட்டான். சென்னை அரசினர் தங்களுடைய 2-6-48ஆம் நாள் உத்தரவில் ழுதென்றலே வீசாதே! யாழே நீ இன்னிசை பரப்பாதே! தமிழே உலவாதே! கட்டிக் கரும்பே நீ ஒழிந்துபோ! உண்ண உண்ணத் தெவிட்டாத மலைத்தேனே நீ கடைத்தெருவுக்கு வருவது குற்றம்! வாழ்வின் விளக்கம் எனத்தகும் கலையே! நீ இந்நாட்டுக்குத் தேவை இல்லை!ழு என்று ஆணை பிறப்பித்து விட்டனர். ஆணைபிறப்பித்ததோடு நிற்கவி்ல்லை சென்னை அரசியலார்; | |
|
|