27. அணைய வாரிய ராழ்கிடங் கின்றலைக் கணைய மோடு கழுவுஞ்செங் குந்தமும் பணையுங் கோலும் பருதிவை வேலுங்கொண் டணைகி லாதெறிந் தந்நின் றகற்றுவர். 28. மேலி வர்ந்துறு மேவலர் தங்களைச் சேல ருந்துஞ் சிரல்கொடு கீறியும் நோல ருந்தொட ராலரி நூற்பொறி யாலெ றிந்தும் வருத்தி யகற்றுவர். 29. கழுகு மாடுங் களிறு முழுவையும் விழுங்கு பாம்பொடு வில்முத லாகிய ஒழுங்க மைந்த பொறியி னுறுவரைப் பழங்கண் செய்வர் பதணத் துறையுநர். 30. கிடுகு தாங்கிக் கிளர்ந்து மதின்முடி கடுகி யேறுங் கருங்கை மறவரைக் கடுகி யன்னார் கழுத்திற் கவைகொடுத் தடைகி லாதுகீழ்த் தள்ளி யகற்றுவர். 31. ஆடு முட்டு மரிகிழிக் குங்கரிக் கோடு முட்டுங் குடல்சரிந் தேவிழ மாடு முட்டு மதின்மிசை யேறுவார் பாடு மட்டும் படாதபா டாகுமே. 32. தோலெ டுத்துத் துனைந்து வருநரைத் தொலெ டுத்துத் துனைந்து துவைக்குமே வேலெ டுத்து விரைந்து வருநரை வேலெ டுத்து விரைந்து சிதைக்குமே. 33. படைய டுத்த மரக்கிளை மேவிய கிடைய டுத்த கிளர்சிறைக் குஞ்சினிற் படைவ ருத்தப் படியிறை வைப்படிக் கிடைவி டுத்து விழுவர் கிடங்கிடை. ------------------------------------------------------------------------------------------- 28. நோல் - வலி. தொடர் - இருப்புச்சங்கிலி. உழுவை - புலி. பழங்கண் - துன்பம். 30. கிடுகு - கேடயம். 32. தோல் - கேடயம், யானைப் பொறி. 33. கிடை - கூடு. படிதல் - தங்குதல். இறைவை - ஏணி. | |
|
|