பக்கம் எண் :


496புலவர் குழந்தை

   
        62.   மண்க ளிக்க மறப்படை வீட்டியே
             கண்க ளிக்க நடுகலைக் கண்டவன்
             பண்ப ழிக்கப் படாதென வேயுடற்
             புண்கி ழித்துப் பொருக்கென வீழ்குவன்.

        63.   இளமை தத்து மிறுதியு முண்டென
             உளமி குத்த வுணர்வு தலைக்கொடு
             களமு குத்துக் கருங்கை மறவரை
             எளிமை வைத்துமு னெள்ளுமோர் மள்ளனே.

        64.   சுற்ற மோவெனச் சூழ்ந்தழ முன்செலீஇக்
             கொற்றங் கொண்ட கொழுந னுரம்படு
             வெற்றி வேலினை வேய்ந்துதன் மார்பிடைச்
             சிற்று யிர்விடு வாளொரு செல்வியே.

        65.   குலையு மென்குழற் கோதைய ரோவென
             உலையு முள்ளத் தொருமை யுறத்தழீஇ
             விலையி லாததை மேவிய காதலன்
             தலையொ டுமுடிந் தாளொரு தையலே.

        66.   சொன்ன சொற்றவ றாது துணிவொடு
             துன்னி மேல்வருந் துன்னலர் தூசியைத்
             தன்னி ளம்புலி தாங்குதல் கண்டுதாய்
             உன்னி யுன்னித்த னுள்ள மகிழுவாள்.

        67.   மேய தெவ்வரை வீழ்த்தியே வீழ்ந்ததன்
             சேய னாண்மைத் திறங்கண்டு செம்மனத்
             தாயு வந்துவந் தார்க்கு மெனிற்றமிழ்த்
             தாயர் வீரந் தனையெடுத் தோதவோ.
 
ஷ வேறு வண்ணம்
 
        68.   தருவலி மறவருந் தலைவ ராயரும்
             பெருவிசைத் தேரிடைப் பின்னு முன்னுமாய்ப்
             பரவையின் மறவர்கள் பட்ட செங்களக்
             குருதியி னிடைசெலக் குரவை யாடுவர்.
-------------------------------------------------------------------------------------------
        63. தத்துதல் - கழிதல். உகுத்து - சிந்தி. 65. உலையும் - வருந்தும். விலையிலாதது -
மறப்புகழ். 66. துன்னி - நெருங்கி. தூசி - கொடிப்படை. 68. பரவைக் களம் - கடல்போன்ற களம்.