69. இன்னது செய்கிலே னெனிலிஃ தாகுவன் என்னமுன் சொன்னதங் கியன்றி லாமையால் மின்னியல் தீயிடை வீழ்ந்து துண்ணென இன்னுயி ரீந்திசை யெய்து வார்களே. 70. சிறுவனுந் தனியனுஞ் செருப்புக் காதனும் திறலொடு பொருதவத் திறமை கண்டுவந் தறைகழல் புனைந்தவ னாண்மை கூறியே மறவனைச் சூழ்ந்திகல் மறவ ராடுவர். 71. அறப்பொருட் படிசிறி தகற்சி யின்றியே மறப்பொருட் படியக மலிவு மீக்குறத் திறப்பொருட் படிவட செருநர் தம்மொடு புறப்பொருட் படிதமிழ்ப் பொருநர் ஆர்த்தனர். | ஷ வேறு வண்ணம் | 72. பண்ணு றுத்த பனிச்சுவை யாழொலி மண்ணு றுத்த மயிர்க்கண் முழவொலி கண்ணு றுத்த கழைமுக் குழலொலி உண்ணு றுத்து மறவரை யூக்குமால். 73. பல்வ கைய பறையின் பருவொலி மல்வ கைய மழைக்கண் முரசொலி கொல்வ கைய வளையொடு கொம்பொலி வெல்வ கைய விழிப்புற வூக்குமே. 74. பாவை யன்ன பருங்கண் விறலியர் பூவை யன்ன புதுக்கிசை பாடியும் ஓவ மின்னுயி ருற்றென வாடியும் தாவி லாப்படர் தங்களை யூக்குவர். 75. இன்ன வாறங் கிருபடை வீரரும் மன்னி நின்று வலிந்து பொருதனர் அன்ன காலையவ் வாரிய ராமனும் பின்ன னோடு பெருங்கள மேயினான். 76. மடங்க லென்ன மணித்தமிழ் மள்ளர்கள் திடங்கொண் டண்மித் திறலொடு தாக்கினர் கடுங்க ணாளர் கணைகொடு மள்ளரை ஒடுங்க வைத்தன ருள்ளுடைந் தொல்கினர். ------------------------------------------------------------------------------------------- 71. மலிவு - மகிழ்ச்சி. ஆர்த்தனர் - பொருதனர். 72. பனி - குளிர்ச்சி - மண் கருங்சாந்து. 73. மல் - வளம். 74. தா - தவறு. | |
|
|