பக்கம் எண் :


498புலவர் குழந்தை

   
       77.    குருதி யாடிக் குவிபிணக் காடணர்
             பரவை போலப் படர்செங் களத்தினைப்
             பரிதி காணப் படாதெனச் செல்லவே
             இரவு வந்த தினுங்கொலு வேனெனா.
 
8. இரவுப் போர்ப் படலம்
 
சேயோன்
 
       1.     பகலை வென்று பனிப்பகை யென்றுபேர்
             புகல நின்ற புகழொடு போதுநீ
             அகல வென்றுல காள வவாவுடன்
             இகல நின்ற விருள்வந் தடைந்ததே.

       2.    தூதர் வந்து சொலப்படை யாளரைப்
             போதி ரென்னவே போய்ப்பொரு தேயவர்
             ஏதி லார்விடு மேவி லழிந்தனர்
             ஈத றிந்துசே யோனு மெதிர்ந்தனன்.

       3.    ஏவுக் காயிர மாயிர மென்னவே
             சாவுக் காகச் சமைதர வாரியர்
             ஆவிக் காக வடுகளம் பாழ்படக்
             கூவிக் கொண்டு குலைகுலைத் தோடினர்.

       4.     நிலவு லாவிய நீண்மதி வெண்குடை
             இலகு செந்தமி ழேந்த லிசையொடு
             விலகி லாது விளங்கிட வேதமிழ்ப்
             புலவர் கூடிப் புதுக்களம் பாடினர்.

       5.     ஒப்பி லாத வொருவன்மு னாரியன்
             தப்பி லாவிழி தம்பியு மற்றரும்
             அப்பு மாரி பொழிய வவையெலாங்
             குப்பு றுத்துக் கொடங்கணை தூவினன்.

       6.     ஒருவ னோடு பலவ ருடன்றெழுந்
             துருவ வெங்கணை தூவ வொளித்தொகை
             இரவை நீக்கிப் பகல்தர வேசுடர்
             வரவு கண்டில ராகி மயங்கினர்.
-------------------------------------------------------------------------------------------
       77. அணர்தல் - மேல்நோக்கியெழுதல். பரவை - கடல், 5. குப்புறுத்து - வீ்ழ்த்தி.