பக்கம் எண் :


510புலவர் குழந்தை

   
        44. கூரம்பு தந்தவனைக் கொல்லென் றெதிர்பொரவே
            பூரியனு மாவி பொருக்கென் றொழித்திட்டான்
            வீரர் விரைந்தோடி வேல்வேந்த னுக்கோத
            மாரி பொழிகண்ணான் மற்றுந் துயர்கொண்டே.

        45.  எம்பியைமுன் றோற்றே னெனத்தனையோ வேல்வீரர்
            அம்புக் கினியவிரை யாயினா ராகெட்டேன்
            செம்பிட்ட மாமேனிச் சேனைத் தலைவர்களும்
            எம்பிக் குறுதுணையா வேகினா ரென்செய்கேன்.

        46. என்றின் னனவா றினைந்து புலம்பியிடை
            நின்று மறுபடியும் நெகிழ்ந்து புலம்புகையில்
            வென்று களங்கொண்டு வீடுற்ற சேயோனும்
            சென்று புலம்புந் திருவாள னைநோக்கி,

        47. அப்பா வருந்துவதா லாகுவதென் னிவ்வுலகில்
            எப்போ தொருநா ளிறப்ப துறுதியன்றோ
            இப்போதே யான்சென் றிகலார் தமைநூறித்
            தப்பாது மீள்வனெனத் தான்றேற்றிச் சென்றனனே.

        48. சென்றுமணித் தேரேறித் தெவ்வர்குல மின்றோடு
            பொன்றி யொழிந்ததெனப் போர்முரசங் காரார்ப்ப
            நின்றபெருஞ் சேனையொடு நேரார் புகழ்தீரன்
            துன்று குருதிச் சுடுசெங் களம்புக்கான்.
 
11. சேய்வீழ் படலம்
 
கலி விருத்தம்
 
        1.   தூயோர்களும் புகழுந்தமிழ்த் தூயோன்றிரு மைந்தன்
            தீயோர்குலந் திரியுங்களந் தேரேறியே செல்லச்
            செயோன்வர விருளோடுடன் செல்லும்பனி போலச்
            சேயோன்வர வடவாரியர் சென்றார்திசை திசையாய்.

        2.   வின்னாணியி னொலியானிலம் வீழ்வார்சில வடவர்
            கொன்னேகணை தூயம்பறை குறைவிப்பது வீணே
            முன்னாளையே கணைதூவிடு முழுவன்மையுங் கண்டாம்
            பின்னேயும தேசெய்தியைப் பேசிப்பய னென்னே.
-------------------------------------------------------------------------------------------
        45. செம்பிட்ட - உறுதியான, செந்நிறமான. 1. சேயோன் - ஞாயிறு.