3. இடியேறென வுறுமப்படை யிரியக்கிடை மாறி வடவாரிய ரொருமூலையில் மருவிப்பொர வாங்கே கொடியாடணி தேரூரியே குறுகித்தனி யாகக் கொடியாருடல் நரிநாயிரை கொள்ளத்தரு வேளை. 4. அதுகண்டவன் சிற்றப்பனு மணைந்தேவட வோனைப் புதையுண்டொளிர் வில்லோயொரு புறமுற்றவன் மகனும் சிதையுண்டொழி நாளாகியே தீப்போர்புரி கின்றான் இதுகண்டும் டோமேலினி யிவனைக்கொல லரிதே. 5. இளையோனொடி யானேகியே யெலிசூழ்வெரு கென்ன வளைவாகியே பெருவாகையை மலைந்தேவரு கின்றோம் எளிதேயிது போதென்னவே யேகென்றனு மானோ டுளையாவவ னரசோடவ னுடனேகின னிளையோன். 6. கண்டானமை வருவானிது காலேயவ னுயிரை உண்டேகுவ மிளையோயென வுளறிச்செல வஞ்சன் அண்டாருயி ருண்டேபொரு மவனுங்கடை மகனைக் கண்டேபதை பதையாவிரு கடையுங்கனல் கால. 7. வந்தாயட படுபாவிநீ வலியக்கொலு மரிமுன் கந்தாடிய கரிபோலவே கடையாகழி மடயா இந்தாருமு னொடுசெந்தலை யேற்றேகியு னாண்டான் செந்தாமரை யடிதூவியே செய்யேவழி பாடே. 8. முதியோரொழி படவேவழி முறையாகவே பின்னும் புதியோரது முறைசெய்யவே பொலியுந்தமி ழரசும் இதுவோமுறை வடவாரிய னிணைநீவியே பெற்றால் அதையாரும திப்பாரிலை யறிவாய்முறை கேடா. 9. நீரோடழி கொடிபோலவே நெடியோனொடு தமிழர் வேரோடழி வாரன்றியே விஞ்சாரொரு வருமே ஊரோடொரு வனுமாயக லூரேதுணை யன்றி யாரோடிருந் தடடாதமி ழரசாளுவை யையா. ------------------------------------------------------------------------------------------- 4. புதை - அம்புக்கூடு. அடுதல் - வெல்லல். 5. உளையா - வருந்துகின்ற. அரசு - சுக்கிரீவன். அவன் - பீடணன். இளையோன் - இலக்குவன். 7. கந்து ஆடிய - கட்டுத்தறியில் வருந்திய. 9. அகல்ஊர் - மக்களில்லாவூர். | |
|
|