பக்கம் எண் :


512புலவர் குழந்தை

   
        10. உம்மோடெழு மிளையாளைமுன் னொடுவன்கொலை செய்தோர்
           தம்மோடுக லந்தேயவர் தாள்கும்பிடு கையா
           எம்மானவ ரான்முன்னனி றந்தாலழு வாயோ
           சும்மாவிருப் பாயோசிரிப் பாயோவெது சொல்லாய்.

        11. ஏனந்தனி லிட்டோர்தமை யேத்தித்திரி வோரின்
           மானந்தனை விட்டேபகை வழியைக்கும் பிட்டே
           ஈனந்திய வத்தாணியி லிருன்தேதொலை யென்று
           நானுந்தனை விடினுந்தமிழ் நல்லோர்விடு வாரோ.

        12. உள்ளந்தனி லுரமின்றியே யுளநாள்வரை யுண்ட
           வள்ளந்தனை யறியாவிழி மடவா ரொடு பொருதார்
           வெள்ளந்தனை நகரிற்புக விட்டேவெளிப் பட்ட
           கள்ளந்தனை நினையாமுனங் கவல்கின்றதெ னுள்ளம்.

        13. உருவந்தமி ழன்றித்தமி ழுணர்வொன்றிலா துரிமை
           ஒருவன்றர வழிபாடுசெய் துயிர்வாழும்நீ விளையும்
           பருவந்தனி லேநென்மணி பதராவது போலப்
           பருவந்துறு பருவந்தனிற் பாழ்பட்டொழிந் திலையே.
 
கொச்சகம்
 
        14. ஒற்றைப்பா வாடை யுடுத்தொண் டொடிக்கையார்
           சுற்றிப் பறந்துவந்து சொல்லிச் சிரிக்காரோ
           சிற்றப்பா தூயதமிழ்ச் செல்வமது வேண்டுமென
           உற்றென்னைக் கேட்டிருந்தா லுடன்றந் திருக்கேனோ.

        15. தெருவினீ யூர்கோலஞ் செல்வாயேற் கைகொட்டிச்
           சுரிகுழலா ருன்சிறுமை சொல்லிச் சிரிக்காரோ
           தருவா யரசெனக்குத் தானென்று கேட்டிருந்தால்
           திருவாள னாகவுனைச் செய்திருக்க மாட்டேனோ.

        16. முற்றத் துறந்த முனிவோ ரெனக்கூறிச்
           சுற்றத்தோ டின்பநலந் துய்ப்போ ரடிவருடும்
           சிற்றப்பா வொவ்வொன்றாத் தேடினுமுன் போலவினப்
           பற்றற்றோர் தங்களையிப் பாரிலறி வாருளரோ.
-------------------------------------------------------------------------------------------
        11. ஏனம் - பாத்திரம். ஈன் ஈந்திய - பிறப்பு. மிக்க - பலரைக் கண்ட அத்தாணி - கொலுமண்டபம். 12. வள்ளம். உணவு. மடவார் - படைத் தலைவர். பொருதார் - பகைவர். 13.
உறு பருவந்தனில். பருவந்து - பிறந்தபோதே வருந்தி.