தொழிக்க முனைந்துவிட்டனர், இனி ஆரியர் சூழ்ச்சி நில்லாது, நின்றாலும் வெல்லாது, வென்றாலும் இரண்டொரு விநாடிக்கு மேல் வாழாது என்பதற்குரிய அடையாளச் சின்னம்! இராமகாதை ஆரியர் வெற்றிக்கு ழுலாலிழு பாடுவது. இராவண காவியம் திராவிடர் எழுச்சியைச் சித்திரித்துக் காட்டுவது, இராவண காவியம் என்ற பெயரிலே மிகச் சிறந்ததோர் இலக்கியம் தோன்றும் அளவுக்குத் தமிழர் உள்ளத்திலே புரட்சிப் புயல் எழுந்து விட்டதைக் காணக் காண அவர்தம் மனப்புழுக்கம் அதிகரிக்கும். அந்த மனப்புழுக்கத்தின் விளைவுதான் ழுஇராவண காவியத்ழு தடை உத்தரவு. தடை என்றதும் தமிழர் எழுச்சி என்ற கடல் தன் கொந்தளிப்பை நிறுத்திவிடுமா என்ன? நிறுத்தாது என்பதுதான் இயற்கை விதி ஆயிற்றே! கான்யூட் அரசன் அலையே அடங்கு என்று ஆணையிட்டுத்தான் பார்த்தான் - ஆனால் அலை அடங்கவில்லை! நவீன கான்யூட்டுக்கள், தமிழகத்தில் அதைச் செய்துபார்க்கின்றனர்; இங்குள்ள கடலிலேயும் அலை ஓயாது நிச்சயம்! -8-6-48 ‘போர்வாள்’ இதழில் | |
|
|