பரிந்துரைகள் | நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் | ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கும் கட்சி, தன் கட்சியல்லாத மற்றக் கட்சிகளும், தன் கட்சிக் கருத்தல்லாத மற்றக் கருத்துகளும் நாட்டில் பரவவிடாமல் செய்யும் போக்கு பாசிசப் போக்காகும். அந்தப் போக்கில் விரைந்து சென்றுகொண்டிருக்கிறது சென்னை அரசாங்கம். இருவர் கதை எழுதினார்கள். ஒருவர் இராமகாதை எழுதினார்; மற்றொருவர் இராவண காவியம் எழுதினார். இராமகாதையில் காணப்படும் ஆபாசப் பகுதிகளை இராவணகாவியத்தில் காண முடியாது. இருந்தும், இராமகாதை சென்னை அரசியலார்க்கு இனிக்கிறது; இராவணகாவியம் கசக்கிறது. இது ஏன்? இராமகாதை எழுதியவர் கம்பர்; இராவண காவியம் எழுதியவர் குழந்தை. கம்பன் ஆரியனின் அடிகளைத் தாங்கத் தயங்கவில்லை; குழந்தை ஆரியனின் அடிகளைத் தாங்க மறுத்தார். இந்தக் குற்றத்திற்காக, ஆரியத்தின் தொண்டரடிப் பொடியாழ்வார்களாகத் தங்களை எண்ணிக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்ளும் பண்பினர். இராவண காவியத்தின்மீது வேண்டாத குற்றஞ்சாட்டித் தடை விதித்துள்ளார்கள். நாம் கவலைப்படுவது இராவண காவியம் தடைப்பட்டுவிட்டது என்பதற்காக அல்ல; இன்றைய அரசியலாரின் போக்குக் கண்டு, வரும் காலம் எள்ளி நகையாடுமே, அதையுணராமல் ஆட்சிப் பீடத்தில் அமைச்சர் குழு இறுமாந்து அமர்ந்துள்ளதே என்பதற்காகத்தான். நமது பரிதாபம் அவர்களுக்கு உரித்தாகுக! உலகில் தடைப்படுத்தப்பட்ட நூல் எல்லாம் ஒரு காலத்தில் மக்களிடம் நடமாடியே தீரும் என்பதும், நடமாடும்பொழுது முன்னைய நிலையைக் காட்டிலும் சிறந்த நிலையில் திகழும் என்பதும் வரலாறு கற்றுக்கொடுக்கும் பாடமாதலால், இராவண காவியம் வீறுடன் நம்மிடம் கொஞ்சும் நாளை எதிர்நோக்குவோம். வாழ்க இராவண காவியம்! வாழ்க புலவர் குழந்தை! - 1948 ஜூலை, தமது ‘மன்றம்’ இதழில | |
|
|