பக்கம் எண் :


54புலவர் குழந்தை

   
பரிந்துரைகள்
 
பேராசிரியர் திரு.க.அன்பழகன் அவர்கள்
 
     நமது சென்னை மாநில அரசியலார் - தமிழ்நாட்டுப் புலவர் பெருமக்கட்குத்
தம்மாலான கவுரவமளிக்கத் தவறுவதே இல்லை.

     தமிழகத்தில் கம்பருக்குப் பின் எட்டு நூற்றாண்டுகளாகவே அவரைப்போல் ஒரு
கவிஞர் தோன்றவில்லை என்று எண்ணி வருந்திக்கொண்டிருந்தவர்களின் துயரம் தீர,
இந்தக் காலத்தில் ஒரு காவியம் இயற்றித் தந்த ஒரு பெரும் புலவருக்கு நமது
அரசாங்கம் பரிசளித்துள்ளது.

     ஆனால், அப்புலவர் அந்தக் காவியத்தை வெளியிட்டு இரண்டாண்டுகள்
கழித்துத்தான் அரசியலார் அதைக் கவனிப்பது என்பதை எண்ணும்போதுதான்
ஆளவந்தாரின் மந்த நடை நம்மை வருந்தச் செய்கிறது.

     இப்பொழுதுள்ள அமைச்சர் குழு ஏற்பட்ட நாளிலிருந்தே உலவிக் கொண்டு வரும்
இந்த இலக்கியத்தைப் படித்துப் பார்க்க இவ்வளவு நாளா வேண்டும்? ஒருவேளை,
அக்காவியத்தைப் படித்த பொழுதே அதன் அருமையை உணர்ந்து, படித்துப் படித்து
அதன் சுவையில் ஈடுபட்டு இவ்வளவு காலத்தையும் செலவிட்டிருப்பார்களோ என்றுகூட
எண்ணத் தோன்றுகிறது.

     என்றாலும், ஆளவந்தார் தமது கடமையை மறந்துவிடவி்ல்லை. அவர்கள்
செய்யவேண்டிய நற்றொண்டைச் செய்துவிட்டார்கள்.

     பேச்சுரிமையும் எழுத்துரிமையும் எல்லோருக்கும் வேண்டும் என்று எழுத்தறிவற்ற
பாமரர்களும் பேசும் இக்காலத்தில் படித்த மந்திரிகள், தமது கடமையை நிறைவேற்றத்
தவறுவார்களா?

     சென்னை அரசாங்கம் பல மாதங்களாகவே கஷ்டப்பட்டு ஆராய்ந்து, இ.பி.கோ.
153ஏ, 295 ஏ, ஆகிய பிரிவுகளின்படி ஆட்சேபகரமான அம்சங்கள் இருப்பதாகத்
தேடிப்பிடித்து, குற்றஞ்சாட்டி - புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்ட ழுஇராவண
காவியம்ழுஎன்ற நூலைப் பறிமுதல் செய்துள்ளது.