நமது வேலைக்காரச் சிறுவன் நம்மைப் பார்ந்துச் சிரித்தான். ழுஏண்டா சிரித்தாய்?ழு என்றேன். ழுஇல்லை, இராவண காவியத்தைத் தடைசெய்துள்ளார்களே சார் இவர்கள், இவர்கள் இருக்கிற பீடத்திலே இனி என்றைக்குமே எதிர்க்கட்சிக்காரர்கள் இடம் பெற மாட்டார்களா?ழுஎன்றான். ழுஏன்? இடம் பெறுவார்களேழு என்றேன். ழுஅவர்கள்ஒருவேளை, இராமாயணம், பெரியபுராணம், கந்தபுராணம் முதலிய எல்லா ஏடுகளுக்குமே தடையுத்தரவு பிறப்பித்துவிட்டால் என்ன சார் ஆகும்?ழு என்றான் அவன். எனக்கும் சிரிப்புத்தான் வந்தது. இன்று இராவண காவியத்தில் என்னென்ன குற்றங்கள் சாட்டப்படக்கூடுமோ, அவை வேறு எந்தப் புராண இலக்கியத்திலும் இல்லாமல் இல்லை. இராமாயணமேகூட அத்தகைய குற்றச்சாட்டுகளினின்றும் தப்பமுடியாதென்றே தோன்றுகிறது. இந்த நிலையில் இராவண காவியத்தைப் பறிமுதல் செய்துவிட்டது இன்றைய அரசாங்கம். பாரதியார் பாடலுக்கு ஒரு காலத்தில் தடையிருந்தது. இன்று அப்பாடல்கள் - ஆளவந் தார்க்கே அரிய பிரச்சாரத் துணையாக உள்ள காரணத்தால் அரியணை ஏறி உள்ளன. இன்னும் எவ்வளவோ ஏடுகள் எவ்வளவோ நாடுகளில் பறிமுதல் செய்யப்பட்டு, அவையெல்லாம் இன்று உரிமையோடு திகழ்வது மட்டுமல்ல, புகழ்பெற்றும் விளங்குகின்றன. அவ்வாறே புலவர் குழந்தையின் இலக்கியத்தின் புகழ் வளர இருப்பதால்தான் போலும் அரசாங்கம் அதனைப் பறிமுதல் செய்துள்ளது என்றே தோன்றுகிறது. வாழ்க பறிமுதல்! வீழ்க எழுத்துரிமை! - 1948 ஜீன், தமது ‘புதுவாழ்வு’ இதழில் | |
|
|