இராவண காவியம் எதற்கு? | கேள்வி வேடிக்கையான கேள்விதான். சற்று வியப்பைத் தருங் கேள்வியுங்கூட. ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் எல்லாம் எதற்கு? பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் எல்லாம் எதற்கு? தொல்காப்பியம் இருக்க நன்னூல் எதற்கு? நளவெண்பா இருக்க நைடதம் எதற்கு? வில்லிபாரதம் இருக்க நல்லாப் பிள்ளை பாரதம் எதற்கு? சிவசாமி அரிச்சந்திர நாடகம் இருக்க நீதிநெறி அரிச்சந்திர நாடகம், மூக்கு வேளார் அரிச்சந்திர நாடகம், அரிச்சந்திர விலாசம் எல்லாம் எதற்கு? ஒன்றிரண்டு மூன்று திருவிளையாடற் புராணங்களும், பதினான்கு சித்தாந்த சாத்திரங்களும் எதற்கு? நான்கு வேதம், ஆறங்கம், பதினான்கு தருமசாத்திரம், பதினென் புராணம், இருபத்தெட்டாகமம், நூற்றெட்டுபநிடதம் எல்லாம் எதற்கு? இது என்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி? அவையெல்லாம் எதற்கென்பதுகூடத் தெரியாதவனா கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டாய்? தெரிந்து கேட்கிறாயா? அல்லது தெரியாமலேதான் கேட்கிறாயா? தெரிந்துந் தெரியாமலுங் கேட்கிறாயா? நீ எப்படிக் கேட்பினுஞ் சரி. அவை யெல்லாம் படிப்பதற்குத்தான். படிப்பது எதற்கு என்று கேட்டுவிடாதே. படிப்பது அறிவு பெறுவதற்காக; வேண்டுமென்றால் படியாதவரை ஏமாற்றுவதற்கென்று வைத்துக் கொள். உலகில் பல மொழிகள் வழங்குகின்றன. ஒவ்வொரு மொழியிலும் எண்ணிறந்த இலக்கிய இலக்கண நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரே பொருளைப் பற்றிப் பத்துப் பதினைந்து நூல்கள் கூட உள்ளன. இவை ஒரு நூலைச் சுருக்கியோ பெருக்கியோ, அல்லது சுருக்கியும் பெருக்கியுமோ - தொகுத்தும் வகுத்தும் தொகைவகை விரியில் - எழுதப்பட்ட நூல்களாக இருக்கும்; அல்லது எதிர்நூல்களாக இருக்கும். தமிழ், வடமொழி முதலிய எல்லா மொழிகளிலும் இவ்விருவகை நூல்களும் நிரம்ப உள்ளன. இவ்வாறு இருப்பது ஒரு மொழிக்குரிய இயல்புமாகும். இது கற்றவர் எல்லார்க்கும் தெரிந்ததொரு செய்தியேயாகும். ழுஇராவண காவியம் எதற்கு?ழு என்ற கேள்வியைக் கேட்டவர்க்கும் இது | |
|
|