பக்கம் எண் :


இராவண காவியம் 523

   
        54. வந்தே றியர்கை யம்பா லுயிர்பி
                ரிந்தே மடிந்த மகனே
           அந்தோ வுனையி ழந்தே யெனைம
                றந்தே யலந்த னறிவாய்
           எந்தா யினையல் வந்தே னெனவு
                கந்தே யெழுந்து வருவாய்
           மைந்தா விதுத விர்ந்தா லுணர்வி
                ழந்தே வருந்தி மடிவேன்.

        55. குளிர்கா வலர்ந்த மலரா டுவண்டர்
                குலமோ டணிந்த குழலார்
           வளியா டலின்றி யொருசே ரநின்று
                மதிமே டுகன்றி யழவே
           ஒளியோ னயர்ந்து படவே சிவந்து
                வொளிபோ யிருண்டு படவே
           வெளியா ரெறிந்த கணையா லிறந்து
                விடவோ பயந்த னுனையே.

        56. செய்ந்நின் றுநீல மலர்கின் றவாவி
                செறிகின் றநாடு தனைநீ
           மெய்ந்நின் றுகாவல் புரிகென் றுநூலை
                மிகவென் றவேலன் விழைய
           எய்ந்நின் றவேவ முறவென் றமார்ப
                மிழிகின் றசோரி புரளப்
           பொய்ந்நின் றுபோன பொருளென் றுபோதல்.
                புகழ்வென் றியாமோ புதல்வா.

        57. வருவா யெழுந்து மகனே விரைந்து
                மலர்வாய் திறந்து மழலை
           தருவா யுவந்து பெறவே நயந்து
                தமிழா ளவந்த தலைவா
           திருவா ளனுந்தை யருகோ டிவந்து
                சிறுவா வுவந்து திகழ்வாய்
           பெருவாழ் வுதந்த பெரியோ யெதிர்ந்து
                பெறவே யெழுந்து வருவாய்.
-------------------------------------------------------------------------------------------
        55. மதிமேடு - கன்னம். ஒளியோன் - சூரியன். 56. எய் - எய்தல். ஏவம் - அம்பு. 57. எதிர்ந்து - மறுபடியும்.