41. புல்லி யேயுடல் போர்த்தொரு மைப்படக் கொல்ல னூதுங் குருகிற் பொருமியே வல்லு யிர்த்திதோ வந்தன னென்றுளே சொல்லி யேமுகந் தொட்டுயிர் விட்டனள். 42. தன்னைத் தாங்குந் தமிழர் தலைமகன் தென்னர்க் காவன செய்து திருவொடு நன்னர்த் தாய நலமிவை கொல்லெனப் பன்னிப் பன்னிப் பரிந்து புலம்பினர். 43 . தையு றுந்தமிழ்த் தாயின் றலைமகள் மையு றும்பொழில் மாலையும் பல்வகைப் பையு றுந்தமிழ்ப் பண்ணையு மெண்ணியே கைய றுநிலை யுற்றுக் கதறினர். 44. கலந்த காதற் கயிற்றினிற் கட்டியே உலந்த போழ்தத் துதவிலா ரென்றெமைப் புலந்து கைவிட்டுப் போயினி ரோவெனக் கலுழ்ந்து நாவலர் கையறம் பாடினர். | அறுசீர் விருத்தம் | 45. புத்துணர்வே யொருநாளும் பொன்றாத பெரும்புகழே புலவோ ராயும் முத்தமிழி னுட்பொருளே மூவாத பெரும்பயனே முகையொன் றில்லாக் கொத்தலரும் புதுமலரே கொம்பவிழுந் தீங்கனியே குளிர்தென் காலே அத்தனையு மொவ்வாத வரும்பொருளே யெங்குச்சென்றீ ரையோ வையோ. 46. முதுக்குறைவோர் தனிக்காத்த தமிழகத்தை யன்னாரின் முன்னே யாகப் புதுக்குறையொன் றில்லாது நன்னலஞ்செய் தாருயிர்போற் போற்றி வந்தே ------------------------------------------------------------------------------------------- 41. குருகு - துருத்தி. பொருமி - பெருத்து, வல்உயிர்த்து. பெருமூச்சுவிட்டு. 42. தன்னைத் தாங்குதல் - தனக்குத் தானே ஒப்பாதல். நன்னர் - நன்மை. 43. தை, பை - அழகு. மாலை - மாலைக் காலம். பண்ணை - விளையாட்டு. கையறுநிலை - துயர். 44. புலந்து - வெறுத்து. கலுழ்ந்து - அழுது. 46. முதுக்குறைவு - அறிவு. | |
|
|