ஒதுக்கிடமி்ன் றில்லாது கொல்புலிவாய் மான்போல வுதவான் முன்னர் எதுக்கெளியே முயிர்தாங்கித் தனித்துழல விட்டகன்றீ ரெந்தா யெந்தாய். 47. பேருலகில் மக்களுக்குப் பேருரிமை யுடையனெனும் பெரும்போர் பெற்றார் யாருடையர் தமிழகத்தைத் தனிக்காத்த பெரியோனே யடல்வே லண்ணால் காரிருளை முனிந்தோட்டுங் கதிர்நாண வகத்திருளைக் கடிந்தே யோட்டு்ஞ் சீருடைய திருவிளக்கே யெமைத்தவிக்க விட்டெங்குச் சென்றாய் சென்றாய். 48. கொடிபற்றிப் படர்ந்துபயன் கொடுக்குமுயர் கொழுகொம்பைக் கொன்றா லந்தக் கொடியற்றுப் படிவீழ்ந்து கொம்போடு பயனழிந்து குறுகு மாப்போல் இடையற்ற நீரொழுக்கி னிணைந்தொருமை யாய்க்கலந்த விறைவன் சென்ற அடியொற்றி யாங்களழ விட்டொருங்கு சென்றனையெம் மன்னா யன்னாய். 49. வந்தேயெங் குலமுதலா விருமையற வொருமையுற வளமை யாவும் நந்தாம லேமுனைந்து நாடாமல் நாடிவர நயந்தே நாளும் தந்தேமுத் தமிழின்பந் தலைநிற்பத் தனிக்காத்துத் தலைமை தாங்கி அந்தோவெங் களைத்தனியே யழவிட்டுச் சென்றீரே யம்மே யப்பா. ------------------------------------------------------------------------------------------- 47. பேருரிமையுடையான், விளக்கு என்னும் பெரும்போர் - இராவணன். 49. நந்தாமல் - குறையாமல். | |
|
|