பக்கம் எண் :


534புலவர் குழந்தை

   
            54. பொன்புறத்த வெள்ளையுள்ளத் தேங்காய்க்குக்
       கண்மூன்று பொருந்து மானால்
இன்புறுத்து மிளநீரை வெளிவிட்டு
       வெறுமையுறு மிளங்கண் ணொன்று
வன்புறுத்தித் தலையுடையி னன்றிவிடா
       வெளியிரண்டு வன்கண் ணேபோல்
அன்புறுத்தித் தலையுடைந்தீ ரவன்விட்டான்
       வெளிப்பகைவர்க் கந்தோ வந்தோ.

55. தம்முதலு மினியசுவைத் தசைக்கனியு
       முதல்வளர்க்குந் தாயி னோடு
மும்முதலு மழியவய லார்க்குதவு
       நுங்கேபோல் மூத்தோ ரான
நும்மிருவ ரோடுதமிழ்க் குலமுதலு
       மழியவட நுளையர்க் காளாப்
பொம்முதலா கியபாவி்க் காளாக்கி
       விட்டெங்குப் போனீர் போனீர்.

56. கல்லாத மறமுதலே கண்ணோடுங்
       கைத்தாயே கலங்கா நின்றே
அல்லாத புரிந்தொழுகு மடிமைதருங்
       குடிமக்க ளான தொன்றோ
சொல்லாத வூமென்றோ சுவைகண்டோ
       கொன்றுண்ணுந் துகளோ ரான
பொல்லாத வாரியப்பாழ்ம் புலிக்கிரையாத்
       தந்தெங்குப் போனீர் போனீர்.

57. வாழையடி வாழையென வந்தவிளங்
       கன்றழிந்த வகையே போல
வாழையடி வாழையிளங் கன்றனைய
       விளவரசை வடவர்க் கீந்து

---------------------------------------------------------------------------
54. ஓடு - பொன்னிறம். இளங்கண் - மெல்லிய தோல்போர்த்த கண். தலையுடைதல் - தேங்காயுடைதல். வன்கண் - வலியகண், ஆண்மை. 55. தம்முதல் - குருத்து. தாய் - சீம்பு, இது கிழங்கு விழுந்த கொட்டைக்குள் இருப்பது. மும்முதல் - கன்று, சீம்பு, பழம். குலமுதல் - சேயோன். பொம்முதல் - உடல் விம்முதல். 56. கைத்தாய் - வளர்ப்புத்தாய். துகள் - குற்றம்.