22. என்றவ னழைப்பச் சீதை யிருகணீர் சோர நின்ற நின்றவந் நிலையி னின்று நிலைபெய ராது நிற்பக் கொன்றையங் குழலி யான்செய் குறையுனக் குண்டோ வென்று சென்றவ னெழுந்து கையாற் றேவிமென் குழலை நீவி. 23. மானினைத் தொடர்ந்து செல்ல வஞ்சனை புரிந்தென் னுள்ளத் தேனுனை யெடுத்து வந்து சிறையினி லிட்ட பொல்லான் தானினைத் தோடு வீழாத் தரைப்படச் செய்த பின்னும் ஏனினை கின்றாய் கண்ணே யினிப்பிரி வென்ப துண்டோ. 24. துடியிடை களவி லுன்னைத் தூக்கிவந் திட்ட அந்தக் கொடியவன் றன்னை யன்னான் குலத்துட னொழித்து விட்டேன் தடியிடைச் சுடுகோல் போலத் தமிழக முழுது மென்றன் அடியிடைப் பட்ட பின்ன ரணங்கலென் னணங்கே யென்றான். 25. நின்றிடு நிலையி னாடன் நிலையறி யாதி ராமன் தன்றிற முரைப்பக் கேளாத் தமிழர்மா தலைவன் றன்பால் ஒன்றிய பெருமை யுள்ளத் துணர்வினைக் கிள்ளச் சீதை குன்றெறி யிடியே றுண்ட குலமயி லெனவே முற்றாள். 26. அனந்தனை யடைய வேநன் கதுவளர் நறுந்தே னொண்பூ வினந்தனை யழிக்கு மாபோ லிருந்தமிழ்த் தலைவ னோடவ் வினந்தனை யழித்தே யையா வெனையடைந் திட்டீ ரென்றே இனைந்துநொந் தழுது சீதை யின்னன பகர லானாள். | எழுசீர் விருத்தம் | 27. என்றனை யடையத் தமிழக முழுதும் எதிரொரு வருமில ராகக் குன்றன குவவுத் தோள்வலி யாலோர் குடைநீழ லிருந்தினி தாண்ட தென்றமி ழிலங்கைப் பெருமகன் றன்னைச் செருக்களத் தினிலினத் தோடு கொன்றனி ரென்னை யடைந்தனி ரிதிலோர் குறையுள தெனுங்குறை யில்லேன். --------------------------------------------------------------------------------------- 24. சுடுகோலிடைத் தடிபோல. தடி - தசை. அணங்குதல். வருந்துதல். | |
|
|