பக்கம் எண் :


இராவண காவியம் 541

   
         32. நல்லபாம் பென்னும் பெட்டையை யடிக்கின்
                 நஞ்சில வெனவெணுஞ் சாரை
            ஒல்லெனச் சீறி யுருத்தெழுந் தவனை
                 யுடன்கொலு மிகலுடை யரிமா
            கொல்லுமப் பொழுது குறும்பெடை தன்னைக்
                 குறுகுவார் தமையெனின் மக்கள்
            மெல்லியல் தன்னைக் கவர்ந்திடு வோனை
                 விடுப்பரோ வொறுத்திடா தையா.

         33. விரும்பிய வனுக்கே தம்மகட் கொடுக்கும்
                 மேதகு தமிழரும் பயந்த
            கரும்பினை வலிதிற் கொளவரு கின்றோன்
                 கணிப்பரு படைவலோ னெனினும்
            துரும்பென மதித்து முறுகிய மானந்
                 தூண்டிடத் துணிவுட னெதிர்த்துப்
            பெரும்பிறி தாவ ரிதைமற மென்று
                 பேசுவர் தமிழ்ப்பெரு மக்கள்.

         34. பொன்னொடு மாடா டணிமணி முதலாப்
                 பொருளென வுலகினர் போற்றும்
            தன்னுடை மையினைக் கவர்ந்தன ரகன்றார்
                 தமையடர்த் தொழிக்குதல் முறையே
            மின்னிடை யவளைக் கவர்ந்தவிவ் விலங்கை
                 வேந்தனை யொழித்தது முறையே
            என்னினு மையா விதுதக வென்றே
                 ஏழைய னுளங்கொளு கில்லேன்.

         35. ஏனெனி லைய வெனையெடுத் தகன்ற
                 ஏதுவை யாய்ந்துபா ராமல்
            தேனினு மினிய செந்தமி ழகத்தைக்
                 திரைகட லுலகெலாம் போற்றத்
            தானுயி ரென்ன நடுநிலை பிறழாத்
                 தகவொடு துலாமெனப் புரந்த
            வானுயர் புகழோன் மலைநிகர் தகவோன்
                 மண்ணிடைப் பட்டிடச் செய்தீர்.
------------------------------------------------------------------------------------------
         33. பெரும்பிறிதாதல் - இறத்தல்.