44. அவர்க்கது செய்தல் அருமையோ வில்லை அலைகட லுலகமே திரண்டு கவர்ப்பட லின்றி யெதிர்க்கினு முதுகு காட்டிடச் செயும்பெரு வலியான் சுவைப்படு தமிழன் தவப்பெருங் குணமே தோகையை யின்றுகண் டுள்ளம் உவக்குற லானீர் என்பதி லையம் உண்டுமோ இலையிலை கண்டீர். 45. பாவியை யொன்றுஞ் செய்கிலா தெடுத்துப் பழந்தமிழ் வழக்குமிவ் விலங்கை மேவினன் வெட்சித் திணையிடைத் தமி்ழர் மேவல ருடன்பொரு காலை ஆவின மோடன் னார்மனை யனைய அரும்பொருள் கவர்ந்துவந் தவற்றைத் தாவில காத்துப் பொருவது போலத் தகைமிகு தமிழிறை மகனும். 46. அடைந்தது மிலங்கைக் கனிதமிழ் மகளிர் அக்கையுந் தங்கையும் போல நடந்ததை மறந்து வந்தெனைச் சூழ்ந்து நகைமுகங் காட்டியின் பூட்டி உடைந்தவெ னுள்ளத் துயர்பறந் தோட உவப்புட னினிதுரை யாடி மடந்தைநின் பிரிவை மறந்திடச் செய்தார் மாபெருந் தேவியும் வந்தே. 47. அனையினுஞ் சால அன்புடன் பரிவாய் அமர்ந்தனள் நோக்கியாழ் போலக் கனிமொழி பேசி மனமிக மாழ்கிக் கவலுறே லிறையுடன் பிறப்பைச் சினைசிதைத் தவனின் மனையெனி லதுநீ செய்பிழை யாகுமோ வென்று தனைநிகர் தமிழ்த்தா யெனவெனைத் தேற்றித் தகவுட னாறுதல் தந்தான். ------------------------------------------------------------------------------------------ 45. பொருவது போல இறைமகனும் எடுத்து மேவினன். | |
|
|