பக்கம் எண் :


58புலவர் குழந்தை

   
     இதற்காகத்தான் கம்பருக்குத் திருநாளும் பெருநாளும் கொண்டாடப்படுகின்றன.

     8,9,10-10-1948இல், சென்னையில் நடந்த கம்பர் மாநாட்டில், நண்பர் பி.ஸ்ரீ
ஆச்சாரியா என்பார், ழுஇராவண காவியம் எதற்கு?ழு என்ற ஓர் வினாவை எழுப்பி ஒரு
கண்டனச் சொற் பெருக்காற்றினார். அது 12-10-48 ‘சுதேசமித்திர’னில் வெளிவந்துள்ளது.
அதாவது,

     ‘இராவண காவியம்’ என்ற ஒரு நூல் வெளிவந்ததையும், சென்னை அரசினர்
அதற்குத் தடைவிதித்திருப்பதையும் குறிப்பிட்டு, ழுஇராவண காவியம் என்று ஒரு தனிநூல்
அவசியம் இல்லை. ஏனெனில், கம்பராமாயணத்தையே இராவண காவியமாகவும்
கொள்ளலாம். இராவணனுடைய பராக்கிரமத்தைக் கம்பன் சித்திரித்திருப்பதைச் சற்றுக்கவனித்தால் இதன் உண்மை விளங்கும்.ழு

     ழுஆங்கிலப் பேராசிரியரான மில்டன் என்பவன் இயற்றியுள்ள ழுசுவர்க்க நீக்கம்ழு
என்ற அரிய கவிதையில், சைத்தான்தான் முக்கிய நாடகப் பாத்திரம். அதே போல்
கம்பராமாயணத்தி்லும் இராவணனுடைய முக்கியத்துவம் குறைக்கப்படவில்லை. ஒரே ஓர்
அடிப்படையான வித்தியாசம் என்னவெனில், இராமனுடைய வீரம் அறம் வளர்க்கும்
வீரம்; இராவணனுடைய வீரம் மறம் வளர்க்கும் வீரம். ராக்ஷஸ ராஜ்யத்தைக் கம்பன்
வர்ணித்திருக்கும் முறையைப் பார்க்கும் போது, கம்பன் இராமபக்தனா? அல்லது
இராவண பக்தனா? என்று கூடச் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. கபந்தன், விராதன்,
கும்பகர்ணன் முதலியவர்களைப் பற்றிக் கூறுகையில் கம்பன் புனைந்திருக்கும் ஹாஸ்ய
சித்திரம் சொல்நயம் பொருள் நயத்துடன் விளங்குகிறது.ழு

     இவைதாம் நண்பர் பி.ஸ்ரீ ஆச்சாரியா அவர்கள், ழுஇராவணகாவியம் எதற்கு?ழு
என்ற வினாவிற்குக் கூறும் விடையாகும். இவ்விடை உண்மையாகவே அவ்வினாவிற்கேற்ற
விடையாகுமா? என்பதுதான் ஆராய்ச்சிக்குரியதொன்றாகும்.

     முதலாவதாக, ‘கம்பராமாயணத்தையே இராவண காவியமாகவுங் கொள்ளலாம்;
இராவணனுடைய பராக்கிரமத்தைக் கம்பன் சித்திரித்திருப்பதைச் சற்றுக் கவனித்தால்
இதன் உண்மை விளங்கும்’ என்னும் கூற்றை நோக்குவாம்.

     இராவணனுடைய பராக்கிரமத்தை எம்முறையில் சித்திரிக்கிறார் கம்பர்?
ஒருவனுடைய நற்செயல்களைச் சிறப்பிப்பதுதான் பராக்கிரமமே அன்றி, அவன் கொடிய
வல்லரக்கன், அரக்கத்