குற்றம்; குடிப்பழக்கமில்லாத நாட்டில், மதுவிலக்குச் சட்டத்தை மீறிக் குடித்தது ஐந்தாவது குற்றம்; வடநாட்டரசர்களைத் துணைக்கழைத்துவந்து வடதென்னாட்டுப் பகையை உண்டாக்கி வைத்தது ஆறாவது குற்றம். இன்னும் கூறிக்கொண்டே போகலாம் அவ்வாரியர் செய்த கொடிய குற்றங்களை. இங்ஙனம் பல குற்றங்களை அடுக்கடுக்காகச் செய்தாரை அவ்வாறு செய்யாதீர் என்று எச்சரித்தது அறக்கொடுஞ்செயல்! கொலை வேள்வியை மறுத்த, குடிப்பதை மறுத்த வள்ளுவரும் அறக்கொடியோர் தானே! ஆரிய முனிவர்கள் செய்த கொலைவேள்வியை, குடியைத்தடுத்தது; சீதையை எடுத்து வந்து பாதுகாப்பில் வைத்திருந்தது ஆகிய இவ்விரு பெருங்குற்றங்களும் - அறக்கொடுஞ்செயல்களும் - இராவணன் நிலையில் இருந்து பார்த்தால், அவன் தன் கடமையைச் செய்தானே என்பதல்லாமல் ஒரு போதும் குற்றமெனப் படா. இவ்விடங்களில் கம்பர் இராவணனைத் திட்டியதிட்டு ஓர் உண்மைத் தமிழ்மகன் வாயிலிருந்து, அஃதும் செந்தமிழைக் கற்றுத் தெளிந்து, ‘கல்வியிற் பெரியவன்’ என்னும் பட்டம் பெற்ற ஒரு கவிப் புலவன் வாயிலிருந்து வரக்கூடிய சொற்களா? அம்மம்மா! என்ன வைவு! ‘இராவண காவியம் எதற்கு?’ என்றவர் கருத்துப்படி, வைதலை வாழ்த்தாகக் கொண்டால்மட்டும் அது இராவணன் பராக்கிரமத்தைச் சித்திரித்ததாகும், அப்போது வேண்டுமானால் இராவண காவியம் வேண்டியதில்லைதான். அரக்கர் செயலெனக் கூறப்படும் அறக்கொடுஞ்செயலினும் கொடிய அறக்கொடுஞ் செயலான கம்பர் செயலின் முன் எங்ஙனம் கம்பராமாயணத்தையே இராவண காவியமாகக் கொள்ள முடியும்? இனி, வீராதிவீரனும் தீராதிதீரனும், அவன் பெயரைக் கேட்டாலே பகைவர்க்கு எலும்பில் காய்ச்சலுண்டாகும் போர்த்திற முடையவனும், பகைவர்களாலேயே ‘இராவணேச் சுரன்’ என்று புகழப் பெற்றவனுமான இராவணனைச் சைத்தானுக்கு ஒப்பிடும் அக்கண்டனக் காரரின் உவமைத்திறனுக்கு ஒப்பானவர் - உவமை கூறத்தக்கவர் - இனியொருவர் தனியாகப் பிறந்து வரவேண்டியதுதான்! சைத்தான் கட்டுக்கதைப் படைப்பு இராவணன் வரலாற்றுத் தலைவன். இந்நிலையில் உவமை எப்படிப் பொருந்துமோ அவரைத்தான் கேட்க வேண்டும். பொருளினும் உவமை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்னும் உவமையிலக்கணங்கூடத் தெரியாத அப்பாவியைக் கேட்டென் பயன்? ‘ஆரியர் என்போர் இன்று இல்லை. ஆரியராவது திராவிடராவது? இது வெறும் புளுகுமூட்டை. நாங்கள் ஆரியர் வழிவந்தவர் அல்லர்; ஆரியரல்லர்’ என்னும் திருக்கூட்டத்தைச் | |
|
|