கொலைக் கஞ்சா இராமன் அறக்கொடியோன் என்பதைத் தமிழ் மக்கள் உணரும்படி செய்வதற்கே யாகும். தமிழ் மக்களைத் தன் ஆடல் பாடல் ஒப்பனைகளால் வழிப்படுத்தி ஆரியர்க்கடிமையாக்கி வந்த சவரி என்னம் ஆரிய மங்கையைத் தமிழ்ப் பெண் என்றும், இராமனிடம் கொண்டிருந்த அன்பினால் பரமபதம் அடைந்தனள் என்றும் மனமுருகப் போற்றிப் புகழ்ந்து வரும் உண்மையறியாத் தமிழர்க்கு அவ்வாரிய மங்கையின் ஐந்தாம்படை வேலையை அறிவுறுத்தி, இன்றும் தமிழகத்தில் பல சவரிகள் உள்ளனர்: ஏமாறாதீர்கள் என்று எச்சரிக்கை செய்யவே யாகும். ஆரியராமன் ஏழிரண்டாண்டு பூழிவெங்காள வாழ்க்கை நடத்துதற்குமட்டும் தமிழகத்திற்கு வரவில்லை; தமிழகத்தில் ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவே வந்தான். வடநாட்டில் என்ன காடுமலைகளா இல்லை? தமிழ்நாட்டுக்குள் ஏன் வர வேண்டும்? தமிழர் தலைவர்களை வஞ்சித்துக் கொன்று தங்கள் ஆதிக்கத்தை இங்கு நிலை நாட்டவே ஆரிய முனிவர்கள் அவனை இங்கு அழைத்து வந்தனர்; காமவல்லியைக் காணும்படி செய்தனர்; தமிழ்நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து உளவு வேலை செய்து வந்தனர்; தம்மை அன்புடன் வரவேற்று ஊணுடையுதவிப் போற்றிய தமிழ்மக்களுக்கு உள்ளிருத்து கொல்லும் கொடுநோய் போல் இருந்து வந்தனர்; உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்தனர். அக் கொடிய ஆரிய முனிவர்களே தமிழ் நாட்டை ஆரியத்துக்கு அடிமைப்படச் செய்தனர்; தமிழர் நாகரிகத்தை, பண்பாட்டை, அழித்தொழித்தனர்; தமிழினத்தைச் சிதைத்துச் சின்னா பின்னப்படுத்தினர்; ஆரியமொழியைத் தமிழரிடைப் புகுத்தித் தனித் தமிழை உருக்குலைத்தனர்; தமிழகத்தின் பரப்பைச் சுருக்கினர்; ‘பிடி சாபம்’ என்பவெல்லாம் பிற்காலத் தமிழர்களை ஏய்க்க எழுதிவைத்த பொருளற்ற போலிப் பொய்யுரையே யாகும் என்னும் இன்னபல ஆரிய முனிவர்களின் குணஞ்செயல்களைத் தமிழ் மக்கள் அறிந்து கொள்ளவே யாகும். அத்தகைய தமிழ்ப் பகைவர்களான ஆரிய முனிவர்கள் எழுதி வைத்த ஆரிய நூல்களை உயர்நூல்களென எண்ணி வாய்விட்டுப் போற்றியும் எழுதியும் வரும் தமிழர்க்கு அவ்வாரிய நச்சு நூல்களின் உண்மையை உணர்த்தவே யாகும். வாலி என்பான், இராவணன் ஆட்சிக்கீழ்த் தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்டு வந்த ஒரு பழந்தமிழ் மன்னன்; மாபெரு வீரன்; சீரிய செங்கோலினன்; குணப்பெருங்குன்றம். வாலி முதலியோர் குரங்குகளல்லர், தமிழர்களே. வாலி சுக்கிரீவனோடு போர்செய்து | |
|
|