கொண்டிருக்கும்போது மறைந்திருந்து அம்பெய்து கொன்ற இராமன் எவ்வகையினும் அறம் வளர்த்தோன் ஆகான்; அறக் கொடியோனேயாவன். இராமனிடம் நேர்மையோ, வீரமோ, தெய்வத் தன்மையோ அணுவளவாவது இருந்திருக்குமானால் வாலியிடம் அறிவுரை கூறி இருவரையும் உறவாக்கியிருப்பான். அவ்வாறு சொல்லியும் வாலி கேட்கவில்லையானால் அவனோடு போர் செய்து கொன்றிருப்பினும் குற்றமில்லை. மனைவியையிழந்த அவ்விருவரும் ‘மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்’ என்றபடி ஒன்றுகூடி ஒரு குற்றமும் செய்யாத வாலியைக் கொன்றது கொடுமையினும் கொடுமை என்பதைத் தமிழ் மக்களுக்கு உணர்த்தவேயாகும்; வாலி, சுக்கிரீவன் மனைவியைக் கவர்ந்து கொண்டு அவனை ஊரைவிட்டோட்டினன் என்பது, வாலி மேல் வேண்டுமென்றே சுமத்தப்பட்ட அடாப்பழியே யாகும் என்பதைத் தமிழ் மக்கட்கு அறிவுறுத்தவே யாகும். பேருருவெடுக்கவோ, பெருங்கடலைத் தாண்டவோ, அசோக வனத்தை யழிக்கவோ, கட்டுக்காவலையுடைய இலங்கையைத் தீக்கிரையாக்கவோ, சஞ்சீவி மலையை அடியோடு தூக்கவோ அத்தகு ஆண்மையுடையவனல்லன் அனுமன். மகேந்திரமலையிலிருந்து இலங்கைக்குப் பாயவேண்டிய வேலை அன்றில்லை. இலங்கைத் தீவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே சிறு அகழி; அதன் குறுக்கே பாலம் இருந்தது. அனுமன் திருட்டுத்தனமாக அவ்வழியே இலங்கை சென்று, கடைமகனான பீடணனைக் கண்டு ஆசைவார்த்தை கூறி, அவன் துணையால் சீதையைக் கண்டு மீளும்போது காவலரால் பிடிக்கப்பட்டு, இராவணனால் நல்லறிவுறுத்தித் துரத்தப்பட்டான். இவ்வளவே அனுமன் செயல். இதையே கல்வியிற் பெரியவர் கம்பர் அவ்வாறு பெருமைப்படுத்திக் கூறித் தமிழரை ஆரியர்க்குக் காட்டிக் கொடுத்த அக் கயவனைத் தமிழ்மக்கள் கோயில் கட்டிக்கும்பிடும் அளவுக்குச் செய்துவிட்டனர். அனுமனின் இரண்டகச் செயலினைத் தமிழ் மக்கட்கு அறுவுறுத்தி, அனுமன் போன்ற காட்டிக் கொடுக்கும் கயவர்களைப் போற்றும் ஏமாளித்தனத்தைப் போக்குவதற்கேயாகும். மண்ணாசைப் பெருக்கால், மணிமுடி புனைந்து மன்னனாக வேண்டும் என்ற விருப்பால், உளவுவந்த அனுமனுடன் சேர்ந்துகொண்டு நள்ளிரவில் கள்வனைப்போல வெளிச்சென்று, குலப்பகைவனான ஆரியராமன் காலில் அடியற்ற மரம்போல் வீழ்ந்து அண்ணனைக் கொன்று ஆரியரால் ஆழ்வார்ப்பட்டம் பெற்ற இனவிரண்டகனான பீடணனை நல்லவனென்றும், நீதிமானென்றும், நீடுவாழ்வோன் (சிரஞ்சீவி) என்றும் போற்றிப் | |
|
|