பக்கம் எண் :


இராவண காவியம் 69

   
     உளவையெல்லாம் பீடணன் சொன்னான். சேயோன் (இந்திரசித்து) தனியாக
ஓரிடத்தில் பொருதுகொண்டிருக்கும்போது இலக்குவன், பீடணன், சுக்கிரீவன், அனுமன்
முதலியோர் சென்று வளைத்துப் பொருது கொன்றனர். இராவணன் இலக்குவனோடு
பொரும்போது இராமன் குறுக்கே சென்று அம்பெய்து கொன்றான். பீடணன்
உளவாளியாகாமல் இருந்திருந்தால், இராவணனை வெல்வேமென்று இராமன் கனவுகூடக்
கண்டிருக்க முடியாது.

     உண்மை யிவ்வாறிருக்க, இராவணன் படைகள் அத்தனையும் அடியோடு
அழிந்தொழிந்தன. இராமன் படைகள், படைவீரர்கள் ஒருவர்கூடச் சாகவில்லை;
எல்லோரும் உயிரத்தெழுந்தனர். இராமன் அம்புக்கெதிர் நிற்க ஆற்றாது இராவணன்
அழிந்தான். புண்ணியம் பாவத்தை வென்றது. அதர்மம் தர்மத்திற்குத் தோற்றது.
தேவர்களைத் துன்புறுத்தி வந்த கொடிய வல்லரக்கனை இராமபிரான் கொன்றான்.
ஒழிந்தது. அரக்கர் குலம். அரக்கர் குலத்தை ஒழிக்கவே திருமால் இராமனாக உலகில்
திருவவதாரம் செய்தார். அரக்கர் பூண்டை அடியோடொழிந்த ரகுராமன் வாழ்க. ழுரகுபதி
ராகவராசாராம் பதீதபாவன சீதாராம்ழு என்று நாமாவளி பாடிக் களிக்கும் தமிழர்க்கு
உண்மையை உணர்த்தவேயாகும்.

     ஆரிய ஆதிக்கத்தைத் தமிழகத்தினின்று அடியோடொழிக்கவே இராவண காவியம்
செய்யப்பட்டது. இராவணன் தமிழர் மாபெருந் தலைவன்; விந்தமுதல் குமரிவரை
ஒருமொழி வைத்தாண்ட பழந்தமிழ் வேந்தன்; தண்டமிழ் வேலித் தமிழகத்தே ஆரியத்
தொத்து நோய் பரவாமல் - புகாமல் தடுத்துநின்ற தனித் தமிழ்க் காவலன்; தமிழ்நாட்டை,
தமிழை, தமிழினத்தைக் காக்கத் தனிக்களத்தொழிந்த தன்மானத் தமிழன்; ஆரியரால்
அரக்கர் என்றவர் எல்லாரும் தமிழர்களே. சென்ற இரண்டாவது உலகப்
பெரும்போரின்போது சப்பானியரை நாம், ‘சப்பானிய அரக்கர்’ என்று அழைத்ததுபோல,
வலியவர்களாகிய எதிரிகளை - தமிழர்களை - ஆரியர்கள் அரக்கர்கள் என்று
அழைத்தனர்; கொடிய இழிகுணங்களையெல்லாம் கற்பித்தனர். நெடுநாட் பிரச்சாரத்தால்
கம்பன் கவியைக் கொண்டு தமிழ் மக்கள் உண்மையென நம்ப வைத்துவிட்டனர். ஏமாந்த
தமிழர்கள் தங்கள் முன்னோரை அரக்கர்களென்றும், தங்கட்கு யாதொரு
தொடர்புமில்லாத புறம்பானவரென்றும், கொடியவர்களென்றும் கொள்ளலாயினர். தமிழர்
குலப்பகைவர்களாகிய ஆரியர்களை நல்லவர் என்றும், தங்கள் முன்னோர்களைக்
கெட்டவர் என்றும் கூறலாயினர். இம்மயக்க வுணர்வை மாற்றி, இராவணன்
முதலியோரைத்