பக்கம் எண் :


70புலவர் குழந்தை

   
     தமிழர்களெனத் தமிழர்கள் உணரும்படி செய்யவே இராவண காவியம்
செய்யப்பட்டது.

     பிரமன் மகன் புலத்தியன். புலத்தியன் மைந்தன் விச்சிரவாவு. விச்சிரவாவுக்கு மூத்த
மனைவியிடம் பிறந்தவன் குபேரன். விச்சிரவாவுக்கு இளைய மனைவியிடம் பிறந்தவர்
இராவணன் முதலிய நால்வரும். விச்சிரவாவின் மூத்த மனைவி மகனான குபேரனைத்
தேவன் எனவும், அரனது தோழன் எனவும், விச்சிரவாவின் இளைய மனைவி மக்களான
இராவணன் முதலியோரை அரக்கர் எனவும் கூறும் பித்தலாட்டத்தைப் போக்கவே
இராவண காவியம் செய்யப்பட்டது.

     ஆரியராமன் தமிழர்குலப் பகைவனெனவும், தமிழர் தலைவனை வஞ்சித்துக்
கொன்ற மாகொடியோன் எனவும், தமிழரைக் கொண்டே தமிழர் தலைவனைக் கொன்று
தமிழ் நாட்டில் ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டிய அறக்கொடியோனெனவும் தமிழர்
உணர்ந்து, அக்கொடியோனைத் தெய்வமாகக் கொண்டு வணங்கி வழிபட்டு வரும்
அறியாமை நீங்கி அறிவு தலைப்படும் பொருட்டே இராவண காவியம் செய்யப்பட்டது.

     இனி, வாலி சுக்கிரீவன் முதலியோரும் குரங்குகளல்லர், தமிழர்களே. இராவணன்
முதலியோரை அரக்கர்கள் என்றதுபோல, வாலி முதலியோரைக் குரங்குகள் என்றனர்
ஆரியர். என்பதற்குச் சான்றாக, நேரு அவர்கள் தம் மகளுக்கு (இந்திராக்காந்திக்கு)
எழுதிய கடிதங்களில் - அந்நூல் 117ஆம் பக்கத்தில் ழுஇராமாயணப் போர் ஆரிய
திராவிடப் போரேயாகும். தென்னாட்டில் வாழ்ந்த திராவிடர்களைத் தாம் ‘குரங்குகள்’
என்றனர்ழு என்று உண்மையை வெளியிட்ட பிறகும், எத்தனையோ ஆராய்ச்சி
அறிஞர்கள் இராவணன் முதலியோரை அரக்கர்கள் எனவும், வாலி முதலியோரைக்
குரங்குகள் எனவும் கூறிவருவதும், எழுதி வருவதும், நாடகத்தில் அவ்வாறே கோலமிட்டு
நடித்து வருவதும், படம் எடுப்பதும் ஆகிய தவறுதலைக் கொள்கையை மாற்றி,
இராமாயணப் போர் ஆரிய திராவிடப்போரே. அரக்கர்கள், குரங்குகள் என்பார்
எல்லாரும் தமிழர்களே. பகைகொண்டு வழிகூறும் ஆரியர்கள் வேண்டுமென்றே
அவ்வாறு எழுதிவைத்தனர். என்னும் உண்மையைத் தமிழ்மக்கள் உணரும்படி செய்து,
தமிழ்நாட்டினின்றும் அக்களங்கத்தை அகற்றவே இராவண காவியம் செய்யப்பட்டது.

     தமிழர்களை ‘அரக்கர்கள்’ என்றதோடமையாது ஆரிய வான்மீகியார், தமிழரச
குடும்பத்தினரை சூர்ப்பநகை, மண்டோதரி, கும்பகர்ணன் என்பன போன்ற
இழிபெயரிட்டுப் பழித்