பக்கம் எண் :


இராவண காவியம் 71

   
     துரைத்தனர். சூர்ப்பநகை: சூர்ப்பு - முறம். நகை - பல். சூர்ப்பநகை - முறப்பல்லி,
முறம்போன்ற பல்லையுடையவள். மண்டோதரி: மண்டு - பெரிது. உதரம் - வயறு.
மண்டோதரி - பெருவயிறி. கும்பகர்ணன்: கும்பம் - குடம். கர்ணம் - காது. கும்பகர்ணன்
- குடக்காதன், குடம்போன்ற காதையுடையவன். ஓர் அரச குடும்பத்தினர், அஃதும்
பேரரச குடும்பத்தினர் தங்கள் மக்களை - முறப்பல்லி, பெருவயிறி, குடக்காதன் என்றா
பெயரிட்டழைத்திருப்பர்? கல்வியிற் பெரியவர் கம்பரும் இவ்விழிதன்மைக்கு
ஏற்றங்கொடுத்துதானே யுள்ளார்? கம்பருக்கு இச்சொற்களின் பொருள் தெரியாமலா
இருந்திருக்கும்? தாழ்த்தப்பட்டோர் பிள்ளைகளை உயர்குலத்தோர் என்போர், வயிறி,
சொரட்டச்சி, நெட்டக்காலன் என இவ்வாறு அழைத்து வருகின்றனர். ஆனால். பேரரச
குடும்பப் பிள்ளைகளை யார் இவ்வாறு இழிபெயரால் அழைத்திருக்கக் கூடும்? ஆரியரால்
தமிழினத்துக்குண்டாகிய இவ்விழி தன்மையைப் போக்கவே கம்பராமாயணமிருக்க
இராவண காவியம் செய்யப்பட்டது.

     இராவணன் காலத்தே விந்தமுதல் குமரிவரை வாழ்ந்துவந்த தமிழ்க் குடிமக்கள்,
தமிழ்ப் பேரரசர்கள், சிற்றரசர்கள், தண்டமிழ்ப் பெண்டிர்கள் ஆகிய எல்லாரையுமே
ஆரிய அடிமையாகிய கம்பரால், தமிழ்மக்கள் வாயினால் உச்சரிக்கவே முடியாத அத்தகு
இழிதன்மையாகப் பழித்துக் கூறியிருக்கும் பழிப்புரையைப் போக்கி, இராவணன்
முதலியோரின் பெருமையையும், அக்காலத் தமிழ்மக்களின் சிறப்பினையும் திறம்பட
எடுத்துக் காட்டுவதன் மூலம் தமிழ்நாட்டின் வரலாறு இடையறாது தொடர்ந்து
நடைபெறுதற் பொருட்டே இராவண காவியம் செய்யப்பட்டது.

     குடி, கொலைவேள்வி போன்ற ஆரியர் செயலை, ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்த
பொன்னன் (இரணியன்), பொற்கண்ணன் (இரணியாக்கன்), சூரன், மாவலி (மகாபலி),
மாந்தரன் (நரகாசுரன்), சம்பரன் முதலிய தமிழர் தலைவர்களை வஞ்சித்துக்
கொன்றதோடு, அவர்களை அசுரர்களெனத் (அரக்கர்) தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தி
வெறுக்கும்படி செய்த பித்தலாட்டத்தை வெளிப்படுத்தவே இராவண காவியம்
செய்யப்பட்டது.

     அனுமன், சுக்கிரீவன், பீடணன் போன்ற கொடுந் தமிழர்கள் செய்த ஆரிய
அடிமைத்தனத்தை, இனவிரண்டகச் செயலை, மானங்கெட்ட மறச்செயலை எடுத்துக்காட்டி,
அன்னாரின் ஐந்தாம்படை வேலையால் இராமன் வெல்லவும் இராவணன் தோற்கவும்
நேர்ந்ததேயன்றி, இராமன் தனியாக எதிர்த்து இராவ