பக்கம் எண் :


இராவண காவியம் 77

   
     1935 முதலாக இவர் பள்ளிப் பாட நூல்கள் எழுதிவந்துள்ளார். இவர் எழுதிய
பள்ளி இலக்கண நூல்கள் (3-11 வகுப்பு) தனிச் சிறப்புடையவை.

     இவர் இதுகாறும் எழுதியுள்ள நூல்களாவன:

     செய்யுள் நூல்கள்: 1. இராவண காவியம், 2. அரசியலரங்கம், 3. நெருஞ்சிப்பழம், 4.
காமஞ்சரி, 5.உலகப் பெரியோன் கென்னடி, 6. திருநணாச் சிலேடை வெண்பா, 7. புலவர்
குழந்தை பாடல்.

     உரை நூல்கள்: 8. திருக்குறள் - குழந்தையுரை, 9. தொல்காப்பியப் பொருளதிகாரம்
- குழந்தையுரை, 10. நீதிக்களஞ்சியம் உரை.

     இலக்கண நூல்கள்: 11. யாப்பதிகாரம், 12. தொடையதிகாரம், 13. இன்னூல்
(சூத்திரம்)

     உரைநடை நூல்கள்: 14. தொல்காப்பியர் காலத் தமிழர், 15. திருக்குறளும்
பரிமேலழகரும், 16. பூவாமுல்லை, (இம்மூன்றும் ஆராய்ச்சி நூல்கள்) 17. கொங்கு நாடு,
18. தமிழக வரலாறு, 19. தமிழ்வாழ்க (நாடகம்), 20. தீரன் சின்னமலை (விடுதலை வீரன்
வரலாறு), 21. கொங்கு நாடும் தமிழும், 22. கொங்குக் குலமணிகள், 23. அருந்தமிழ்
விருந்து, 24. அருந்தமிழ் அமிழ்து, 25. சங்கத் தமிழ்ச் செல்வம், 26. ஒன்றே குலம், 27.
அண்ணல் காந்தி, 28. தமிழெழுத்துச் சீர்திருத்தம், 29. தீரன் சின்னமலை நாடகம்
( இன்னும் அச்சாகவில்லை)

     1925-இல், தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கம் தொடங்கினதும் இவர்
அவ்வியக்கத்தில் சேர்ந்து, பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். அன்று முதல்,
சுயமரியாதை இயக்கம், அதன் மறுபதிப்பான திராவிடர் கழகம், அதன் மறுமலர்ச்சியான
திராவிட முன்னேற்றக் கழகம் எனத் தொடர்ந்து அதே கட்சியில் - ஒரே கட்சியில் -
இருந்து வருகிறார். சுயமரியாதைக் கொள்கையினின்றும் இவர் அணுவும் அசையாதவர்;
முறுகிய கட்சிப் பற்றுடையவர்; பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் செய்யாதவர். பள்ளி
ஆசிரியராக இருந்துகொண்டே அத்தொழிலுக்குச் சிறிதும் இடையூறில்லாமல், ‘பெரியார்
சீடர்’, ‘கறுப்புச் சட்டைக்காரர்’ என்று ஊரார் கூறுமளவுக்குக் கட்சித் தொண்டாற்றி
வந்தார்; இன்னும் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்.

     தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் ழுமுத்தாரம்ழு எனும் திங்கள்
வெளியீட்டில் வெளிவந்த இவரது ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பான
ழுபூவாமுல்லைழு என்னும் நூலுக்குச் ழுசுதேசமித்திரன்ழு நாளிதழில் மதிப்புரை எழுதிய
ஓரன்பர்,