பக்கம் எண் :


88புலவர் குழந்தை

   
     சென்றவர், குகனென்னும் தோழனால் கங்கையைக் கடந்து வழி நெடுக ஆரிய
முனிவர் வரவேற்று வழியனுப்பச் சென்று சித்திரகூட மலையை யடைந்திருந்தனர்.
தேரோட்டி வந்த சுமந்திரன் சென்று கூறவே தசரதன் இராமன் பிரிவால் உயிர்
விட்டனன். பரதன் செய்தி கேட்டு வந்து தந்தையின் உடலை அடக்கம் செய்து சேனை
சூழச் சித்திரகூடத்தை யடைந்து இராமனை நாடாள வரும்படி வேண்டினான். இராமன்
நாடு பரதனுக்குரியதென்பதைக் கூற, பரதன் நான் அதை உனக்குத் தந்தனன்
ஏற்றருள்கவென, இராமன் நான் பெற்றோர் சொற்படி பதினான்காண்டு கழித்து
வருகிறேன். அது மட்டும் எனக் கீடாக நீ ஆள்வாயெனப் பரதன் இராமன் மிதியடியைப்
பெற்று மீண்டு, நந்தியூர் என்னும் சிற்றூரில் தங்கி, மிதியடியை முடிபுனைந்
தரியணையிருத்தி அதை வணங்கி வந்தனன். சத்துருக்கன் ஆட்சி புரிந்து வந்தனன்.

     சித்திர கூடத்தைவிட்டு இராமன் தமிழகத்தையடைய ஆரியர் வரவேற்கச் சில
நாளங்கிருந்து சரபங்கன் நிலையை யடைந்திருந்தனர். ஒரு நாள் முனிவர்கள் ஒன்று கூடி
வந்து தமிழகத்தில் தாங்கள் தவ வேள்வி செய்ய முடியாமல் கரன் தடுப்பதைக் கூறி
அவனைக் கொன்று தங்களை வாழ்விக்கும்படி வேண்டினர். இராமன் அதற் கிசைந்து
விடை பெற்றுச் சென்று முனிவர் இருக்கையில் தங்கித் தமிழ் கற்றும், வேள்வி செய்ய
முனிவர்க்குதவியும், இரண்டகத் தமிழரை நட்பாக்கியும் பத்தாண்டினை அங்கே
கழித்தனன். பின் அகத்தியன் நிலையை யடைந்து அவனால் ஒரு வில்லும், இரு
அம்புக்கூடுந் தரப்பெற்றுச் சென்று பஞ்சவடி என்னும் இடத்தில் தங்கியிருந்தனர்.

     இராமன் ஒரு நாள் தனித்துலாவிய காமவல்லியைக் கண்டு காமுற்று, அவள்
அறிவுரையைக் கொள்ளாது கையைப் பிடித்திழுத்து வற்புறுத்தினான். அவள் திமிறிக்
கொண்டு விரைந்து சென்றனள். இராமன் தன் தம்பியால் அத் தமிழரசியை மூக்கையும்
காதையும் முலைக்கண்களையும் அறுத்துக் கொன்று, முன்னேற்பாடில்லாத கரனையும்
பொருதழித்தான்.

     தூதரால் செய்தி யுணர்ந்த இராவணன் கொதித்தெழுந்து தேரேறி விந்தஞ் சென்று,
காமவல்லி வளர்த்த மானைவிட்டு இராமலக்குவரைப் பிரித்து அவரை வளைத்துக்
கொள்ளும்படி வீரரைவைத்துச் சீதையை எடுத்து வந்தனன். சீதை புலம்ப, உன்னை உன்
கணவன் வரின் நல்லறிவு புகட்டி அவனுடன் அனுப்புகிறேன். அஞ்சேல் எனத் தேற்றித்
தன் தங்கையின் நிலையில் வைத்துப் போற்றி வந்தனன்.