அனுமன் வெளிச் செல்லும்போது வாயில் காவலர் பிடித்துக் கொண்டுபோய் இராவணனிடம் விட்டனர். இராவணன் அவன் வந்த வரலாற்றைக் கேட்டு, அயலானோடு கூடி அரசைச் கொன்ற இரண்டகச் செயலைக் கண்டித்துக் கூறி, இராமனைத் தனியாக வந்து மன்னிப்புக்கேட்டு மனைவியை யழைத்தேகும்படி கூறெனக் கூறியனுப்பினன். அனுமன் சென்று கூறவே, இராமன் பணிவை மறுத்துப் படையுடன் சென்று இலங்கைப்புறத்துத் தங்கினான். ஒற்றரால் இதனை அறிந்த இராவணன், இராமனிடம் அதிகாயனைத் தூது விட்டான். இராமன் பணிவை மறுத்துப் போருக்குத் தயாரெனக் கூறிவிட்டனன். இராவணன் பேரவை கூட்டிப் போரில் இராமனை முறியடிப்பதே ஏற்றதென முடிவு கண்டனன். அப்போது பீடணனெழுந்து இராமன் திறமை கூறி, ழுசீதையை விட்டு உறவு கொள்வோம். மீளானாயின் விந்த நாட்டை விட்டேனும் பகையின்றி வாழ்வோழு மென்றனன். இராவணன் வெகுண்டு அவையை விட்டோடும்படி கூற, அவன் அவ்வாறே சென்றனன். அவையை விட்டுச் சென்ற பீடணன் - நீலன், வேலன், குயிலன், நேரி என்னும் படைத்தலைவருடன் சென்று அடைக்கலமென இராமன் காலில் விழுந்தான். அவன் புகல் தந்து அப்போதே இலங்கையரசனாக அவனுக்கு முடிசூட்டினன். பீடணன் இலங்கையை எளிதில் வெல்வதற்கான உளவையெல்லாம் இராமனுக்கு உரைத்தனன். இதையறிந்த இராவணன் கடுஞ்சினங்கொண்டு போர்க்குத் தயாராகும்படி படைத்தலைவருக்குக் கட்டளையிட்டான். தானைக் தலைவர் முரசறைவித்தனர். தமிழ் மறவர் போர்க் கோலம் பூண்டு திரண்டனர். பொழுது புலர்ந்ததும் பகைப்படை நகர்ப்புறத்து வந்து தங்கிற்று. இராவணன் கோட்டையைக் காப்பமைக்கும்படி கட்டளையிட்டுப் பகைப்படை நிலைமையை அறிந்துவர ஒற்றரை ஏவினான். பீடணன் அவரைக் காட்டிக்கொடுத்தனன். இராமன் அவரைச் சிறையிட்டனன். இவ்வாறு பல முறை காட்டிக் கொடுத்தனன் அக்கடை மகன். ஆரியப்படை ஊரை முற்றியது. மதில் போரில் வடவர் படை தோற்றது. களங்கண்டு பொருதனர். பின் இரண்டு நாள் இரவும் பகலும் ஓயாது போர் நடந்தது. இருபடையிலும் பலர் மாண்டனர். கும்பகன்னனுக்கும் இராமனுக்கும் கடும்போர் நடந்தது. இராமன் சமயம் பார்த்து முறையின்றிக் கைகால்களை யறுத்துக் | |
|
|