கொன்றான். செய்தி கேட்ட இராவணன் கதறிப் புலம்பச் சேயோன் தேற்றிச் சென்று போர்க்களம் புக்கான். ஓரிடத்தில் கும்பலாக இருந்த ஆரியப்படையொடு தனியாகப் பொருது கொண்டிருந்தான் சேயோன். பீடணன் இராமனிடம் கூறி இதுவே அவனைக் கொல்ல ஏற்ற காலமென்றான். இராமனேவ இலக்குவன், பீடணன், சுக்கிரீவன், அனுமன் முதலியோர் பெரும் படையுடன் சென்று வளைத்துப் பொருதனர். ஒருவன் பின்னாலிருந்து தேர்ப்பாகனைக் கொன்றான். பீடணன் குதிரைகளைக் கொன்றான்.முடிவில் சேயோன் அம்புக்கூடு வறிது பட்டது. வாள் முதலிய கொண்டு பொருதான். அந்தோ! முடிவில் இலக்குவன் ஓரம்பை யேவித் தமிழர்குலக் கொழுந்தைத் தலையை யறுத்துக் கொன்றனன். அது கேட்ட இலங்கை ஓவென்றலறியது. இராவணன் பலவாறு புலம்பிச் சீறியெழுந்து களஞ் சென்றான். இராவணனுக்கும் இராமனுக்கும் கடும்போர் நடந்தது. இலக்குவன் முதலிய அனைவரும் சூழ்ந்து பொருதனர். இராமன் தேர்ப்பாகனைக் கொன்றான். பீடணன் குதிரைகளைக் கொன்றான். இராவணன் வெகுண்டு அப்பாவி மேல் எறிய வாளை ஓங்கினான். இலக்குவன் குறுக்கே வந்து அம்பெய்யவே அவ் வாளை அவன் மேல் எறிந்தான். அப்போது, அதாவது இலக்குவன் பக்கம் வாளெறியத் திரும்பும்போது, மாதலி என்பான் ஒரு கூறிய அம்பை இராமனிடம் கொடுத்து, வாள் எறிந்து திரும்பு முன் கொல்க எனவே, முறை கெட்ட இராமன் அவ்வாறே தமிழகம் புலம்பத் தலையறுத்து வீழ்தினான். தமிழர் மாபெருந் தலைவன் உடல் மண்ணில் புரண்டது. அடுகளம் அழுகளமாயது. வண்டார்குழலி உடனுயிர் விட்டனள். யாவரையும் அடக்கம் செய்து காடு வாழ்த்திச் சென்றனர் தமிழர். இராமன் பீடணனுடன் கோயில் புக்கிருந்து, பீடணனால் சீதை அழைத்துவரப்பட, அவள் இராவணன் பெருமை கூறி வருந்தினாள். இராமன்அதைப் பொருட்படுத்திலன். இராமன் பீடணனோடு, தமிழகத்தில் தமிழரைப் போல எல்லா உரிமையையும் எய்தி ஆரியர் நிலையாய் இருந்து வாழ்தற்கேற்ற ஒப்பந்தஞ் செய்துகொண்டு, பீடணனை இலங்கை யரசனாக்கிப் பெரும் படையைக் காப்பாக வைத்துவிட்டு அயோத்தி சென்றனன். சுக்கிரீவன் கிட்கிந்தை சென்றனன். இராமன் அயோத்தி சென்று முடிபுனைந்து அரசு புரிந்து வருகையில், ஓர் ஆரியன் தனது மாண்ட பிள்ளையுடன் அரண்மனையை யடைந்து, ழுஉனது நாட்டில் ஒரு சூத்திரன் - தமிழன் | |
|
|