பக்கம் எண் :


92புலவர் குழந்தை

   
     தவஞ் செய்கிறான். அதனால், எனது பிள்ளை இறந்ததுழு எனக் கூற, அதைக்
கேட்ட இராமன் ஆரியர் வழிகாட்ட அங்குச் சென்று, பீடணனது ஆரிய
அடிமையாட்சியை வெறுத்து வாள் வடக்கிருந்த - உயிர் விடற்கு உண்ணா நோன்பிருந்த
சம்புகன் என்னும் தமிழ் மகனை வெட்டி வீழ்த்தி நகருற்றான். ஆரியர் செத்த பிள்ளை
பிழைத்த தெனக் கூறிவிட்டனர்.

     ஒருநாள் ஓர் ஒற்றன் இராமனிடம் வந்து ‘அயலான் மனையில் பல மாதம்
இருந்தவளை அழைத்து வந்து வைத்துக்கொண்டான்’ என ஊரார் பழிக்கின்றனர் எனக்
கூறினான். இராமன் அதைச் சீதையிடம் கூறிவருந்தினான். சீதை ஊர் பழிப்பதற்கு
அஞ்சக்கூடாது எனக் கணவனைத் தேற்றினாள். எனினும் இராமன் மனம் ஒப்பாது
இலக்குவனால் சீதையைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு நாடாண்டு வந்தனன்.