|
2
ஊர் அலர் உரைத்த காதை
|
|
|
|
|
|
[
ஊர் அலர் உரைத்த பாட்டு
]
|
|
|
|
|
|
நாவல் ஓங்கிய மாபெருந் தீவினுள்
|
|
|
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த
|
|
|
தீவகச் சாந்தி செய்தரு நல்நாள்
|
|
|
மணிமே கலையொடு மாதவி வாராத்
|
|
5
|
தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வரச்
|
|
|
|
|
|
சித்திரா பதிதான் செல்லல்உற்று இரங்கித்
|
|
|
தத்துஅரி நெடுங்கண் தன்மகள் தோழி
|
|
|
வயந்த மாலையை வருகெனக் கூஉய்ப்
|
|
|
பயங்கெழு மாநகர் அலர்எடுத்து உரைஎன,
|
|
10
|
வயந்த மாலையும் மாதவி துறவிக்கு
|
|
|
|
|
|
அயர்ந்துமெய் வாடிய அழிவினள் ஆதலின்
|
|
|
மணிமே கலையொடு மாதவி இருந்த
|
|
|
அணிமலர் மண்டபத்து அகவயின் செலீஇ
|
|
|
ஆடிய சாயல் ஆயிழை மடந்தை
|
|
15
|
வாடிய மேனி கண்டுஉளம் வருந்திப்
|
|
|
|
|
|
பொன்நேர் அனையாய் புகுந்தது கேளாய்
|
|
|
உன்னோடு இவ்வூர் உற்றதுஒன்று உண்டுகொல்
|
உரை |
|
வேத்தியல் பொதுஇயல் என்றுஇரு திறத்துக்
|
|
|
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்
|
|
20
|
பண்ணியாழ்க் கரணமும் பாடைப் பாடலும்
|
|
|
|
|
|
தண்ணுமைக் கருவியும் தாழ்தீங் குழலும்
|
|
|
கந்துகக் கருத்து மடைநூல் செய்தியும்
|
|
|
சுந்தரச் சுண்ணமும் தூநீர் ஆடலும்
|
|
|
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும்
|
|
25
|
காயக் கரணமும் கண்ணியது உணர்தலும்
|
|
|
|
|
|
கட்டுரை வகையும் கரந்துஉறை கணக்கும்
|
|
|
வட்டிகைச் செய்தியும் மலர்ஆய்ந்து தொடுத்தலும்
|
|
|
கோலம் கோடலும் கோவையின் கோப்பும்
|
|
|
காலக் கணிதமும் கலைகளின் துணிவும்
|
|
30
|
நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த
|
|
|
|
|
|
ஓவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும்
|
|
|
கற்றுத் துறைபோகிய பொன்தொடி நங்கை
|
|
|
நல்தவம் புரிந்தது நாண்உடைத்து என்றே
|
|
|
அலகுஇல் மூதூர் ஆன்றவர் அல்லது
|
|
35
|
பலர்தொகுபு உரைக்கும் பண்புஇல் வாய்மொழி
|
|
|
|
|
|
நயம்பாடு இல்லை நாண்உடைத்து என்ற
|
|
|
வயந்த மாலைக்கு மாதவி உரைக்கும்:
|
உரை |
|
காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப்
|
|
|
போதல் செய்யா உயிரொடு நின்றே
|
|
40
|
பொன்கொடி மூதூர்ப் பொருள்உரை இழந்து
|
|
|
|
|
|
நல்தொடி நங்காய் நாணுத் துறந்தேன்
|
உரை |
|
காதலர் இறப்பின் கனைஎரி பொத்தி
|
|
|
ஊதுஉலைக் குருகின் உயிர்த்துஅகத்து அடங்காது
|
|
|
இன்உயிர் ஈவர்; ஈயார் ஆயின்
|
|
45
|
நல்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்:
|
|
|
|
|
|
நளிஎரி புகாஅர் ஆயின் அன்பரோடு
|
|
|
உடன்உறை வாழ்க்கைக்கு நோற்றுஉடம்பு
அடுவர்
|
|
|
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து.
|
|
|
அத்திறத் தாளும் அல்லள்எம் ஆயிழை
|
உரை |
50
|
கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாஅள்
|
|
|
|
|
|
மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக்
|
|
|
கண்ணீர் ஆடிய கதிர்இள வனமுலை
|
|
|
திண்ணிதில் திருகித் தீஅழல் பொத்திக்
|
|
|
காவலன் பேர்ஊர் கனைஎரி ஊட்டிய
|
|
55
|
மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை
|
|
|
|
|
|
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
|
|
|
திருந்தாச் செய்கைத் தீத்தொழில்
படாஅள்
|
உரை |
|
ஆங்ஙனம் அன்றியும் ஆயிழை கேளாய்
|
|
|
ஈங்குஇம் மாதவர் உறைவிடம் புகுந்தேன்
|
|
60
|
மறவணம் நீத்த மாசுஅறு கேள்வி
|
|
|
|
|
|
அறவண வடிகள் அடிமிசை வீழ்ந்து
|
|
|
மாபெருந் துன்பம் கொண்டுஉளம் மயங்கிக்
|
|
|
காதலன் உற்ற கடுந்துயர் கூறப்
|
|
|
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
|
|
65
|
பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம்
|
|
|
|
|
|
பற்றின் வருவது முன்னது பின்னது
|
|
|
அற்றோர் உறுவது அறிகென்று அருளி
|
|
|
ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி
|
|
|
உய்வகை இவைகொள்என்று உரவோன் அருளினன்
|
உரை |
70
|
மைத்தடங் கண்ணார் தமக்கும்என் பயந்த
|
|
|
|
|
|
சித்திரா பதிக்கும் செப்பு நீஎன,
|
|
|
ஆங்குஅவள் உரைகேட்டு் அரும்பெறல் மாமணி
|
|
|
ஓங்குதிரைப் பெருங்கடல் வீழ்த்தோர்
போன்று
|
|
|
மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும்
|
|
75
|
கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்துஎன்.
|
உரை |
|
|
|
|
ஊர்
அலர் உரைத்த முற்றிற்று.
|
|
|