|
8
மணிபல்லவத்துத் துயர் உற்ற
காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலை மணிபல்லவத்துத் துயில்
எழுந்து துயர்உற்ற பாட்டு
]
|
|
|
|
|
|
ஈங்குஇவள் இன்னண மாக இருங்கடல்
|
|
|
வாங்குதிரை உடுத்த மணிபல் லவத்திடைத்
|
|
|
தத்துநீர் அடைகரைச் சங்குஉழு தொடுப்பின்
|
|
|
முத்துவிளை கழனி முரிசெம் பவளமொடு
|
|
5
|
விரைமரம் உருட்டும் திரைஉலாப் பரப்பின்
|
|
|
|
|
|
ஞாழல் ஓங்கிய தாழ்கண் அசும்பின்
|
|
|
ஆம்பலும் குவளையும் தாம்புணர்ந்து மயங்கி
|
|
|
வண்டுஉண மலர்ந்த குண்டுநீர் இலஞ்சி
|
|
|
முடக்கால் புன்னையும் மடல்பூந் தாழையும்
|
|
10
|
வெயில்வரவு ஒழித்த பயில்பூம் பந்தர்
|
|
|
|
|
|
அறல்விளங்கு நிலாமணல் நறுமலர்ப் பள்ளித்
|
|
|
துஞ்சு துயில் எழூஉம் அம்சில் ஓதி
|
உரை |
|
காதல் சுற்றம் மறந்து கடைகொள
|
|
|
வேறுஇடத்துப் பிறந்த உயிரே போன்று
|
|
15
|
பண்டுஅறி கிளையொடு பதியும் காணாள்
|
|
|
|
|
|
கண்டுஅறி யாதன கண்ணிற் காணா
|
|
|
நீல மாக்கடல் நெட்டிடை அன்றியும்
|
|
|
காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப
|
|
|
உவவன மருங்கினில் ஓர்இடம் கொல்இது
|
|
20
|
சுதமதி ஒளித்தாய் துயரம் செய்தனை
|
|
|
|
|
|
நனவோ கனவோ என்பதை அறியேன்
|
|
|
மனநடுக் குறூஉம் மாற்றம் தாராய்
|
|
|
வல்இருள் கழிந்தது மாதவி மயங்கும்
|
|
|
எல்வளை வாராய் விட்டுஅகன் றனையோ
|
|
25
|
விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள்
|
|
|
|
|
|
வஞ்சம் செய்தனள் கொல்லோ அறியேன்
|
|
|
ஒருதனி அஞ்சுவென் திருவே வாவெனத்
|
உரை |
|
திரைதவழ் பறவையும் விரிசிறைப் பறவையும்
|
|
|
எழுந்துவீழ் சில்லையும் ஒடுங்குசிறை முழுவலும்
|
|
30
|
அன்னச் சேவல் அரச னாகப்
|
|
|
|
|
|
பன்னிறப் புள்இனம் பரந்துஒருங்கு ஈண்டிப்
|
|
|
பாசறை மன்னர் பாடி போல
|
|
|
வீசுநீர்ப் பரப்பின் எதிர்எதிர் இருக்கும்
|
|
|
துறையும் துறைசூழ் நெடுமணல் குன்றமும்
|
|
35
|
யாங்கணும் திரிவோள் பாங்கினம் காணாள்
|
உரை |
|
|
|
|
குரல்தலைக் கூந்தல் குலைந்துபின் வீழ
|
|
|
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி,
|
|
|
வீழ்துயர் எய்திய விழுமக் கிளவியில்
|
|
|
தாழ்துயர் உறுவோள் தந்தையை உள்ளி
|
|
40
|
எம்இதில் படுத்தும் வெவ்வினை உருப்பக்
|
|
|
|
|
|
கோல்தொடி மாதரொடு வேற்றுநாடு அடைந்து
|
|
|
வைவாள் உழந்த மணிப்பூண் அகலத்து
|
|
|
ஐயா வோஎன்று அழுவோள் முன்னர்
|
உரை |
|
விரிந்துஇலங்கு அவிர்ஒளி சிறந்துகதிர்
பரப்பி
|
|
45
|
உரைபெறு மும்முழம் நிலமிசை ஓங்கித்
|
|
|
|
|
|
திசைதொறும் ஒன்பான் முழுநிலம் அகன்று
|
|
|
விதிமாண் ஆடியின் வட்டம் குயின்று
|
|
|
பதும சதுரம் மீமிசை விளங்கி
|
|
|
அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே
|
|
50
|
நறுமலர் அல்லது பிறமரம் சொரியாது
|
|
|
|
|
|
பறவையும் முதிர்சிறை பாங்குசென்று அதிராது
|
|
|
தேவர்கோன் இட்ட மாமணிப் பீடிகை
|
|
|
பிறப்புவிளங்கு அவிர்ஒளி அறத்தகை ஆசனம்
|
உரை |
|
கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும்
|
|
55
|
இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி
|
|
|
|
|
|
எமதுஈது என்றே எடுக்கல் ஆற்றார்
|
|
|
தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார்
|
|
|
செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத்
|
|
|
தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள்
|
|
60
|
இருஞ்செரு ஒழிமின் எமதுஈது என்றே
|
|
|
|
|
|
பெருந்தவ முனிவன் இருந்துஅறம் உரைக்கும்
|
|
|
பொருஅறு சிறப்பில் புரையோர் ஏத்தும்
|
|
|
தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்.
|
உரை |
|
|
|
|
மணிபல்லவத்துத்
துயர் உற்ற காதை முற்றிற்று.
|
|
|