பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
637

அருஞ்சொற்பொருள் அகராதி

        பாட்டு எண்
 

     
  அக்கு - உருத்திராக்கம்,சங்குமணி 195
  அகம் - யாக குண்டம் 92
  அகலம் - மார்பு 355
  அங்கராகம் - பூசப்படுவன 194
  அசும்பு - சிறுதிவலை 149
  அஞர் - வருத்தம் 155
  அட்டிய - இட்ட  
  அடல் - பகை 218
  அடல்களி - அடுதல் செய்யாது இயல்பாகிய பேரின்பம் 297
  அடுத்தோம் - கொடுத்தோம் 257
  அண்டர் - ஆயர் 136
  அண்டன் - மகாதேவன் 161
  அண்ணல் - தலையாயது 256
  அணங்காய் - வருத்துவதாய் 7
  அணங்கு - தெய்வம் 3
      தெய்வநாற்றம் 244
  அணவும் - பொருந்தும் 296
  அணி - ஆபரணம் 5
      அழகு 54
  அணை - அணைந்த கரை 179
  அணைதல் - அணுகுதல் 202
  அத்தன் - தந்தை 112
  அப்பாற்செலவு - மால் முதலாயினார்க்கு மேலாகிய  பதங்கள் 155
  அப்பு - நீர் 354
  அம் - அழகு 3
       நல்ல 88
  அம்பரம் - ஆகாயம் 182
  அம்பல் - பரவாத களவு 180
  அம்ம - கேள் 197
  அமர - செறிய 372
  அமை - வேய்-மூங்கில் 10
  அயரா - மயங்கி 231
அயில் - வேல் 31
           கூர்மை 36
  அரம்பையர் - தெய்வ மகளிர்   251
  அரமங்கையர் - தெய்வப்பெண்கள் 377
  அரவம் - ஆரவாரம் 160
          பாம்பு 125
  அரவன் - பாம்பை அணிந்தவன் 320
  அரவு - பாம்பு 34
  அரி - சீயம் 157
  அரில் - பிணக்கம் 14
  அருக்கு - அருமை 275
அருள் - அருளான் வரும் ஆனந்தம் 18
          ஏவல் 159
  அல் - இரவு 179
  அலர்தல் - விரிதல் 180
  அலவன் - நண்டு 84
  அவம் - காரணமின்மை 4
  அழல்தடம் - தீக்காய் கலம்,அழலால் நிறைந்த பொய்கை 202
  அழுங்கல் - இரக்கம் 29
       கெடப்புகல் 158
       ஆரவாரம் 172
  அழுவினை - அழுந்தொழில் 229