வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல்விடம் தானமுது செய்தருள் புரிந்தசிவன் மேவுமலை தன்னைவினவில் ஏனமிள மானினொடு கிள்ளிதினை கொள்ளவெழிலார் கவணினால் கானவர்த மாமகளிர் கனகமணி விலகு காளத்திமலையே. (சம்பந்தர்) “உண்ணாவரு நஞ்சம் உண்டான்கண் ஊழித்தீ யன்னான்காண் உகப்பர்காணப் பண்ணாரப் பல்லியம் பாடினான்காண் பயின்றநால் வேதத்தின் பண்பினான்காண் அண்ணாமலை யான்காண் அடியார் ஈட்டம் அடியிணைகள் தொழுதேத்த அருளுவான்காண் கண்ணாரக்காண் பார்க்கோர் காட்சியான்காண் காளத்தியான் அவன் என்கண்ணுளானே” (அப்பர்) செண்டாடும் விடையாய் சிவனே என்செழுஞ்சுடரே வண்டாருங் குழலாள் உமைபாக மகிழ்ந்தவனே கண்டார் காதலிக்கும் கணநாதன் எங்காளத்தியாய் அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே” (சுந்தரர்) பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள்போல் விளங்க செருப்புற்ற சீரடிவாய் கலசம் ஊனமுதம் விருப்புற்ற வேடனார் சேடரிய மெய்குளிர்ந்தங்கு அருட்பெற்று நின்றவா தோணோக்க மாடாமோ. (திருவாசகம்) சுவாமி துதி நீர்கொண்ட பொலம்பூங்கொன்றை நெடுஞ்சுடை வனத்துடுத்த சீர்கொண்ட புலித்தோற்(கு) அஞ்சிச் சென்று புக்குஒளிப் பத்தாவு(ம்) ஏர்கொண்டவுழையினங்கன் றிலங்கிய திருக்கரத்துக் கார்கொண்ட பொழிற்காளத்திக் கடவுளை மனத்துள் வைப்பாம். |