பக்கம் எண் :

102 திருமுறைத்தலங்கள்


                         அம்பிகை துதி

     பூமகள் இறைஞ்ச நெற்றிப் புதுமணித் திலகம் தோய்த்து
     தாமரை நகுமுகத்தோர் தான் பெறப் பணிகளங்க
     மாமதிப்புரையு மங்கேழ் வயக்குதிர் மலர்த்தாள் குன்றக்
     கோமகளரும் ஞானப்பூங்கோதையை வணக்கம் செய்வாம்.


                     
கயிலை பாதி காளத்தி பாதி

     அறியாமலேனும் அறிந்தேனும் செய்த
     செறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறிநின்று
     நன்முகில்சேர் காளத்திநாதன் அடிபணிந்து
     பொன்முகலி யாடுதலும் போம். (நக்கீரர்)


                       
கண்ணப்பதேவர் திருமறம்

     தந்தையாந்தாய் தந்தை நாகனாந் தன் புறப்புப்
     பொத்தப்பி நாட்டு உடுப்பூர் வேடுவனாந்தி திக்கும்
     திண்ணப்பனாம் சிறுபேர் பெய்தவத் தாற்காளத்திக்
     கண்ணப்பனாய் நின்றான் காண்.

                          திருப்புகழ்

    சிரத்தானத்தில் பணியாதே-செகத்தோர் பற்றைக் குறியாதே
    வருத்தாமற்றொப்பிலதான-மலர்த்தாள் வைத்தெந்தனை ஆள்வாய்
    நிருத்தா கர்த்தா துவநேசா - நினைந்தார் சித்தத்துறைவோனே
    திருத்தாள் முத்தர்க்கருள்வோனே - திருக்காளத்திப்பெருமாளே.

                                         -“எள்ளலுறுங்
     கோளத்தி நீக்கும் குணத்தோர்க்க அருள்செய்திருக்
     காளத்தி ஞானக் களஞ்சியமே”.                 (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்
     காளஹஸ்தி & அஞ்சல் - 517644
     சித்தூர் மாவட்டம் - ஆந்திர மாநிலம்.