பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 103


20. திருவொற்றியூர்

(சென்னை)

     தொண்டை நாட்டுத் தலம்.

     சென்னையின் ஒரு பகுதி. ‘உயர்நீதி மன்றப்’ பகுதியிலிருந்து
திருவொற்றியூருக்கு நகரப்பேருந்து செல்கிறது. இப்பேருந்தில் ஏறி,
காலடிப்பேட்டையை அடுத்து, ‘தேரடி நிறுத்தத்தில்’ (தேரடி Stop)
இறங்கினால் எதிரில் வீதிகோடியில் கோயிலைக்காணலாம்.

     ஆதிபுரி என்றழைக்கப்படும் தலம். சுந்தரர், சங்கிலியாரை மணந்து
கொண்ட சிறப்புடையது. கலியநாயனாரின் அவதாரத் தலம். தியாகேசப்
பெருமான் வீற்றிருந்தருளும் தெய்விகச் சிறப்பு வாய்ந்த தலம். ஐயடிகள்
காடவர்கோன், முசுகுந்தன் முதலியோர் வழிபட்டது.

     முற்றத்துறந்த பட்டினத்து அடிகள் முத்தி பெற்ற தலம். வடலூர்
வள்ளற்பெருமானின் வாழ்வொடு இயைந்த பதி. மிகப்பெரிய கோயில்.
கோயிலின்முன் பதினாறுகால் மண்டபம் உள்ளது. பக்கத்தில் பெரிய
தீர்த்தக்குளம் நீராழி மண்டபத்துடன் உள்ளது.

     இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது.
பழமையான கோபுரம் உள்ளே நுழைந்தால் செப்புக்கவசமிட்ட