பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 107


     “விடையவன் விண்ணுமண்ணும் தொழநின்றவன் வெண்மழுவாட்
      படையவன் பாய்புலித் தோலுடை கோவணம் பல்கரந்தைச்
      சடையவன் சாமதேவன் சசிதங்கிய சங்க வெண்தோ(டு)
      உடையவன் ஊனமில்லி உறையும் இடம் ஒற்றியூரே.”
                                                (சம்பந்தர்)

     “ஓம்பினேன் கூட்டைவாளா உள்ளத்தோர் கொடுமை வைத்துக்
      காம்பிலா மூழைபோலக் கருதிற்றே முகக்கமாட்டேன்
      பாம்பின் வாய்த்தேரை போலப் பலபல நினைக்கின்றேனை
      ஓம்பிநீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூர் உடையகோவே." (அப்பர்)

     ‘அழுக்கு மெய்கொடு உன்திருவடி அடைந்தேன்
          அதுவு(ம்) நான் படப்பால தொன்றானால்
      பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
          பிழைப் பனாகிலும் திருவடிப் பிழையேன்
      வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால்
          மற்று நானறியேன் மறு மாற்றம்
      ஒழுக்க என்கணுக்கு ஒரு மருந்துரையாய்
          ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே.”     (சுந்தரர்)

     “மெய்த் தொண்டர் செல்லும் நெறி அறியேன் மிகநற்பணி செய்
      கைத் தொண்டர் தம்மிலும் நற்றொண்டு வந்திலன் உண்பதற்கே
      பொய்த் தொண்டு பேசிப் புறம்புறமே உன்னைப் போற்றுகின்ற
      இத்தொண்டனேன்பணி கொள்ளுதியோ கச்சி ஏகம்பனே”
                                            (பட்டினத்தார்)

      “தஞ்சாகமூவுலகும் ஆண்டு தலையளித்திட்(டு)
       எஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் - நஞ்சம்
       கரந்துண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி
       இரந்துண்டிருக்கப் பெறின்” (ஐயடிகள் காடவர்கோன்)

                                          -“தேர்ந்துலகர்
       போற்றும் திருவொற்றிப் பூங்கோயிற்குட் பெரியோர்
       சாற்றும் புகழ்வேத சாரமே              (அருட்பா)


அஞ்சல் முகவரி :-


      அ/மி. தியாகராஜசுவாமி திருக்கோயில்
      திருவொற்றியூர், சென்னை - 600 019.