பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் “அடியேன் படுதுயர்களையாய் பாசுபதா பரஞ்சுடரே” என்னும் தொடரை இறுதியில் வைத்துப் பாடுந்திறம் நெஞ்சை நெகிழ வைக்கவல்லன. அற்புதமான நெஞ்சுருக்கும் பதிகம். “திருவுமெய்ப்பொருளும் செல்வமும் எனக்குன் சீருடைக் கழல்கள் என்றெண்ணி ஒருவரை மதியாது றாமைகள் செய்து மூடியு முறைப்பனாய்த் திரிவேன் முருகமர் சோலை சூழ் திருமுல்லை வாயிலாய் வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர்களையாய் பாசுபதா பரஞ்சுடரே” (சுந்தரர்) -“துன்பமற எல்லைவாயற்குண் மட்டுமேகில் வினையேகுமெனும் முல்லை வாயிற்குள் வைத்த முத்தி வித்தே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் திருமுல்லைவாயில் & அஞ்சல் காஞ்சிபுரம் மாவட்டம் - 609 113. |