பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 115


23. திருவேற்காடு

     தொண்டை நாட்டுத் தலம்.

     (1) சென்னையிலிலிருந்து திருவேற்காட்டிற்கு நகரப்பேருந்துகள்
ஏராளமாக உள்ளன. இங்குள்ள அருள்மிகு கருமாரி அம்மன் கோயில்
பிரசித்தி பெற்றது. இக்கோயிலிருந்து 1 கி.மீ. தொலைவில் சிவாலயம் உள்ளது.
நல்லபாதை உள்ளது. காடுவெட்டியாறு என்று சொல்லப்படும் (பழைய)
பாலாற்றங்கரையில் கோயில் உள்ளது.

     (2) ‘பூந்தண்மலி’ எனப்படும் பூந்தமல்லியிலிருந்து ஆவடி செல்லும்
சாலையில் பேருந்தில் சென்று, காடுவெட்டி பஞ்சாயத்து என்னும் நிறுத்தத்தில்
( Stop-ல்) இறங்கி, ஆற்றைக்கடந்தால் கோயிலை அடையலாம். நிறுத்தத்தில்
இருந்து பார்த்தாலே சிவாலயம் நன்கு தெரிகின்றது. இக்கோயில் அருள்மிகு
கருமாரியம்மன் கோயிலுடன் இணைந்தது. மூர்க்க நாயனார் அவதரித்த தலம்.

     அகத்தியருக்கு இறைவன் திருமணக் கோலக்காட்சி அருளிய தலம்.
சூரசம்ஹாரத்தின் பின்பு, முருகப்பெருமான் இத்தலத்திற்கு வருகை தந்ததாகத்
தலபுராணம் கூறுகிறது. முருகப்பெருமான் வேலால் உண்டாக்கிய தீர்த்தமே
வேலாயுத தீர்த்தம் எனப்படுகிறது. வேதம் வழிபட்ட தலமிது. நான்கு
வேதங்களும் வேல மரங்களாய் நின்று,