இறைவனை வழிபட்டதால் இத்தலம் ‘வேல்காடு’ = வேற்காடு என்று பெயர் பெற்றது. விஷம் தீண்டாப்பதி என்ற சிறப்பும் இத் தலத்திற்குண்டு. இறைவன் - வேதபுரீஸ்வரர், வேற்காட்டுநாதர் இறைவி - பாலாம்பிகை, வேற்கண்ணி தலமரம் - வெள் வேலமரம் (வெளிப்பிராகாரத்தில் உள்ளது) தீர்த்தம் - வேலாயுத தீர்த்தம் (இது கிணறுதான். கோயிலுக்கு வெளியில் மதிலைஒட்டி, அரச மரத்தினிடத்தில் உள்ளது. தற்போது நீரில்லை- பயன்படுத்தப்படவில்லை. கோயிலுக்குள் தனியே வேறொரு கிணறு உள்ளது.) சம்பந்தர் பாடல் பெற்றது. ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் கிழக்கு நோக்கியது. கோயில் பொலிவுடன் திகழ்கிறது. உள்ளே நுழைந்ததும் செப்புக்கவசமிட்ட கொடிமரம் காட்சியளிக்கின்றது. விசாலமான உள்ளிடம். வலப்புறம் அருணகிரியார் சந்நிதி, பக்கத்தில் கிணறு. மறுபுறத்தில் சனி பகவான் சந்நிதியும், மூர்க்க நாயனார் சந்நிதியும் உள்ளன. இதன் முன்னால் தலமரமும் அதன் முன்பு சிவலிங்கப் பிரதிஷ்டையும் இருக்கின்றன. வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் எவையுமில்லை. நேரே மூலவர் சந்நிதி உள்ளது. உள்வாயிலைக் கடந்து சென்றால் வலப்புறம் அகத்தியரும் சூரியனும் உள்ளனர். அடுத்து, பத்மபீடத்தில் எண்கோண வடிவில் நவக்கிரக சந்நிதி உள்ளது. நால்வர் பிரதிஷ்டையைத் தொடர்ந்து அறுபத்து மூவர் காட்சியளிக்கின்றனர். நடராச சபைக்கு நேராகப் பக்கவாயில். பிராகார மூலையில் விநாயகர். அடுத்து காசி விசுவநாதர் விசாலாட்சி சந்நிதி. பாலசுப்பிரமணியருக்கு முன்பு சிவலிங்கப் பிரதிஷ்டை. கருவறைச் சுவரில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. இதன் நேர்பின்னால் சுவர் ஓரமாக மற்றொரு சண்டேஸ்வரர் திருவுருவம் வைக்கப் பட்டுள்ளது. துவாரபாலகர்களைக் கடந்து உட்சென்றால் நேரே மூலவர் தரிசனம் - கிழக்கு நோக்கியது. வலப்பால் விநாயகர், நால்வர், சோமாஸ் கந்தர், வில்லேந்தி மயிலேறி காட்சிதரும் ஆறுமுகன், அகத்தியர், மூர்க்க நாயனார் முதலிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராசசபை - நேரே வாயில் உள்ளது. மூலவர் - அழகிய சிவலிங்கத் திருமேனி. பின்னால் சுவரில் திருமணக்கோலத்தில் சுவாமி, |