பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 117


அம்பாள், திருவுருவங்களும்  பக்கத்தில்  விநாயகர்  உருவமும் உள்ளன.
அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது - நின்ற நிலை. பக்கத்தில் பைரவர்.
பைரவருக்கு முன்னால் உள்ள தூண் ஒன்றில் கருமாரியின் உருவம் கீழே
பாம்புடன் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. மகாகும்பாபிஷேகம் 23-6-1999-ல்
நடைபெற்றுள்ளது.

     “ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன்
      வீழ்சடையினன் வேற்காடு
      தாழ்விடை மனத்தாற் பணிந்தேத்திடப்
      பாழ்படும் மவர் பாவமே”             (சம்பந்தர்)

                                  - “மல்லல்பெறு
     வேற்காட்டர் ஏத்து திரு வேற்காட்டின் மேவியமுன்
     னூற்காட்டுயர்வேத நுட்பமே”           (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

     அ/மி. வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
     திருவேற்காடு & அஞ்சல்
     திருவள்ளூர் மாவட்டம் - 600 077.

24. மயிலாப்பூர்

சென்னை

     தொண்டை நாட்டுத் தலம்.

     தருமமிகு சென்னை மாநகரின் நடுவண் அமைந்துள்ள மயிலாப்பூரில்
கம்பீரமாகக் காட்சி   தருவது அ/மி.  கபாலீஸ்வரர்   திருக்கோயிலாகும்.
‘திருமயிலைக் கபாலீச்சரம்’ எனச் சிறப்பிக்கப் பெறும் இத்தலம் அம்பாள்
மயில்வடிவிலிருந்து வழிபட்டமையால் ‘மயிலாப்பூர்’ எனப்பெயர் பெற்றது.
மயிலை என்றவுடன் நினைவுக்கு வருவதே இத்திருக்கோயில்தான்.

     இறைவன் - கபாலீஸ்வரர்.
     இறைவி - கற்பகாம்பாள்.
     தலமரம் - புன்னை