பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 123


அடுத்து விநாயகர் சந்நிதிகள் உள்ளன. இச்சந்நிதியில் இருபுறங்களிலும்
நாகலிங்கப்   பிரதிஷ்டை யுள்ளது.   அடுத்து   நால்வர், கஜலட்சுமி,
முத்துக்குமாரசாமி சந்நிதிகள் உள.   முத்துக்குமாரசுவாமி  சந்நிதியில்
அருணகிரிநாதரும் உள்ளார்.

     மூலவர் - மேற்கு நோக்கிய சந்நிதி, கோமுகம் மாறியுள்ளது. சுயம்பு,
பால் போன்று வெண்மையாக உள்ளது. பசு (காமதேனு) பால் சொரிந்து
வழிபட்டமை தொடர்பாகச் சிவலிங்கத் திருமேனியில் சிரசிலும், மார்பிலும்
பசுவின்குளம்பு வடுதெரிகின்றது. (பால் வண்ண நாதர்) சுவாமிக்கு மேலே
விதானம் உள்ளது. முகப்பில் துவார பாலகர்கள் உள்ளனர் - சுவாமிக்குப்
பால் அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. பஞ்சாமிர்தம் முதலான பிற
அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன. உள்
பிராகாரத்தில் ஏராளமான சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. காலபைரவர்
பஞ்சலிங்கங்கள் உள்ளன.  கோஷ்ட   மூர்த்தங்களாக,   தட்சிணாமூர்த்தி,
விநாயகர், மகாவிஷ்ணு, பிரம்மா,   துர்க்கை   ஆகியோர்     உள்ளனர்.
சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகச்
சொல்லப்படும், இக்கோயிலுள் வில்வ மரங்கள் அதிகம் உள்ளன. பங்குனி
உத்திரத்தில் பெருவிழா நடைபெறுகிறது. சூரியன் இத்தலத்தில் பெருமானை
அர்த்தசாமத்தில் வழிபட்டதாக   வரலாறு   உள்ளதால்   பெருவிழாவில்
கொடியேற்றம் அர்த்தசாமத்தில்தான் நடைபெறுகிறது.

     (கிருத்திகை, பௌர்ணமி   முதலிய   விசேஷங்களும் இராக்கொண்டு
வருவதே இக்கோயிலில் கடைப்பிடிக்கப்படுகின்றது. பங்குனி பௌர்ணமியில்
தான் வான்மீகி முனிவர் வழிபட்டு முத்தி பெற்றதாகச்   சொல்லப்படுகிறது).
விழாக்காலங்களில் சுவாமி புறப்பாடு காலை மாலைகளில்   சந்திரசேகரரும்
பஞ்சமூர்த்திகளும் மட்டுமே. ‘தியாகராஜா’ புறப்பாடு   பகலில் கிடையாது.
இரவில் மட்டுமே நிகழ்கிறது.

     ஆடி  தை   மாதங்களில்   திருவிளக்கு   வழிபாடு    சிறப்பாக
நடைபெறுகின்றது. பங்குனிப் பெருவிழாவில் மூன்றாம்,  நான்காம்   நாள்
உற்சவம் - பவனி உற்சவம் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

     ஒன்பதாம் நாள் விழாவில் ‘வன்னி மர’ச் சேவை விசேஷம். பத்தாம்
நாளில்தான் வான்மீகி முனிவருக்குத் தியாகராஜா, திருக்கல்யாண நடனத்தைக்
காட்டியருளும் ஐதீகம் விசேஷமாக நடைபெறுகிறது. பதினோராம் நாளில்
நடைபெறும் வெள்ளியங்கிரி விமான சேவை காணத்தக்கது. இத்தல புராணம்
பூவை.