பக்கம் எண் :

124 திருமுறைத்தலங்கள்


கல்யாணசுந்தர முதலியார் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. கோயில்
நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது. திருவான்மியூரில்தான் பாம்பன்
சுவாமிகளின் சமாதி உள்ளது.

     “கரையுலாங் கடலிற் பொலிசங்கம் வெள்ளிப்பிவன்
      திரையுலாங்கழி மீனுகளுந் திருவான்மியூர்
      உரையுலாம் பொருளாயுலகாளுடையீர் சொலீர்
      வரையுலா மடமாது உடனாகிய மாண்பதே.”       (சம்பந்தர்)

    “விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்
    அண்ட நாயகன் தன்னடி சூழ்மின்கள்
    பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும்
    வண்டு சேர்பொழில் வான்மியூர் ஈசனே.”         (அப்பர்)

                                     -‘கார்த்திரண்டு
    வாவுகின்ற சோலைவளர் வான்மியூர்த் தலத்தின்
    மேவுகின்ற ஞான விதரணமே.’                 (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

    அ/மி. மருந்தீஸ்வரர் திருக்கோயில்
     திருவான்மியூர் - சென்னை - 600 041.