பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 125


26. திருக்கச்சூர்
கச்சூர்

     தொண்டை நாட்டுத் தலம்.

     (சென்னைக்குப் பக்கத்தில் உள்ள) சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து
ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பேருந்துச் சாலையில் 1 1/2 கி.மீ. சென்று,
“தியாகராஜபுரம் - திருக்கச்சூர்” என்று பெயர்ப்பலகையுள்ள இடத்தில்
வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் சென்று திருக்கச்சூரை
அடையலாம். ஊருள் சென்றதும் வலப்பால் திரும்பிச் சென்றால் (கச்சூர்)
ஆலக்கோயிலையும் இடப்பால் சென்றால் மலையடிக் கோயிலான மருந்தீசர்
கோயிலையும் அடையலாம்.

     சுந்தரர் திருக்கழுக்குன்றம் வழிபட்டுத் திருக்கச்சூரை அடைந்து
பெருமானை - ஆலக்கோயில் அமுதனைத் தொழுது, மதிற்புறத்தே பசியுடன்
அமர்ந்திருக்க ; இறைவன் அந்தணர் வடிவில் வந்து, சுந்தரரை அங்கையே
இருக்கச் செய்து ; இவ்வூரிலுள்ள அடியார்கள் வீடுதோறும் சென்று, உணவு
பெற்று வந்து, இட்டு அவர் பசியை மாற்றிய நிகழ்ச்சி நடைபெற்ற பதி. பசி
நீங்கப்பெற்ற சுந்தரர், இறையருள் கருணையை வியந்து, ‘முதுவாயோரி’
என்னும் பதிகம் பாடிப் போற்றினார். முதலில் ஆலக்கோயிலையும் பின்பு
மருந்தீசர் கோயிலையும் தரிசிக்க வேண்டும்.

     தொண்டை நாட்டிலுள்ள தியாகராஜா சந்நிதிகளுள் இத்தலமும் ஒன்று,
இங்குள்ள தியாகேசர் ‘அமுத் தியாகர்’ எனும் பெயருடையவர். அமுதம்
திரண்டு வருவதற்காகத் திருமால் கச்சப வடிவில்