பக்கம் எண் :

126 திருமுறைத்தலங்கள்


(ஆமை வடிவில்) இருந்து இறைவனை இத்தலத்தில் வழிபட்டதாக வரலாறு.
இக்கோயில் ஆலக்கோயிலாகும். ஆதலின் ‘கச்சபவூர் எனும் பெயர்
நாளடைவில் மக்கள் வழக்கில் மாறி ‘கச்சூர்’ என்றாயிற்று என்பர்.

1) கச்சூர்க் கோயில் - ஆலக்கோயில்

     இறைவன் - விருந்திட்ட ஈஸ்வரர், விருந்திட்ட வரதர்,
               கச்சபேஸ்வரர்.
     இறைவி - அஞ்சனாக்ஷியம்மை
     தலமரம் - ஆல்
     தீர்த்தம் - கூர்ம (ஆமை) தீர்த்தம்.

2) மருந்தீசர் கோயில் (மலையடிவாரக் கோயில்)

     இறைவன் - மருந்தீசர்
     இறைவி - அந்தகநிவாரணி அம்பாள், இருள்நீக்கித் தாயார்.
     இம்மலைக்கு மருந்து மலை - ஒளஷதகிரி என்று பெயர்.
     விநாயகர் - தாலமூல விநாயகர் (அ) கருக்கடி விநாயகர்.
    
     சுந்தரர் பாடல் பெற்றது.

கச்சூர்க் கோயில் - ஆலக்கோயில்

     கிழக்கு நோக்கியுள்ளது. எதிரில் கச்சூர் ஏரி தெரிகின்றது.
ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் மட்டுமே. கோயிலுக்கு எதிரில்
பதினாறுகால் மண்டபம் உள்ளது. இம்மண்டபத் தூண்களில் அநுமந்த
சேவை, கூர்மாவதாரம், காளிங்க நர்த்தனம், கல்கி அவதாரம், துர்க்கை,
ஆதிசேஷன், ஊர்த்துவ தாண்டவம், காளி முதலிய பல சிற்பங்கள்
இருப்பதைக் காணலாம்.

     வாயிலில் நுழைந்ததும், கொடிமரம், நந்தி, பலிபீடங்கள் உள்ளன.
இவை சுவாமி சந்நிதிக்கு நேரே சாளரம் அமைந்து அதற்கு எதிரில்
வெளியில் அமைந்துள்ளன.

     பக்க (தெற்கு) வாயில் முன்னால் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்
தூண் ஒன்றில் திருமால் ஆமை வடிவில் வழிபடும் சிற்பம் உள்ளது.
இம்மண்டபத்தில் ‘அமுதத் தியாகேசர் சபை’ உள்ளது.