பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 131


                                        -“ஈடில்லை
     என்னுந் திருத்தொண்டர் ஏத்தும் இடைச்சுரத்தின்
     மன்னும் சிவானந்த வண்ணமே”           (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்
     திருவடிசூலம்
     (வழி) செம்பாக்கம் S.O. 603 108
     காஞ்சிபுரம் மாவட்டம்.

 

28. திருக்கழுக்குன்றம்

     தொண்டை நாட்டுத் தலம்.

     செங்கற்பட்டில் இருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன. 14 கி.மீ.
தொலைவு. செங்கற்பட்டிலிருந்து மாமல்லபுரம், கல்பாக்கம் முதலிய
ஊர்களுக்கான பேருந்துகளும் இத்தலத்தின் வழியே செல்கின்றன.

     வேதமே, மலையாய் இருத்தலின் ‘வேதகிரி’ எனப் பெயர் பெற்றது.
வேதாசலம் கதலிவனம் கழுக்குன்றம் என்பன இத்தலத்துக்குரிய வேறு
பெயர்கள். மலைமேல் ஒரு கோயில் உள்ளது. ஊருக்குள் ஒரு கோயில்
உள்ளது. இவை முறையே மலைக்கோயில் தாழக்கோயில் என்றழைக்கப்
படுகின்றன. மலை 500 அடி உயரமுள்ளது. மலையில்    நாடொறும்
உச்சிப்போதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்குப் ‘பட்சி
தீர்த்தம்’ என்று பெயர். மலைமீது உள்ள கோயிலில் வீற்றிருந்தருளும்
இறைவன் -வேதகிரீஸ்வரர் (சுயம்பு மூர்த்தி), இறைவி - சொக்கநாயகி. சுனை
ஒன்றும் உள்ளது.

     மார்க்கண்டேயர் வழிபட்ட தலம். வடநாட்டிலிருந்து வரும்
யாத்ரிகர்களுக்குப் ‘பட்சி தீர்த்தம்’ என்று சொன்னால்தான் புரியும்.
மலைமீது ஏறிச்செல்ல நன்கமைக்கப்பட்ட மலைப்பாதை - செம்மையான
படிகளுடன் உள்ளது.

     இம்மலையை வலம் வருதல் சிறப்புடையது. வலம் வருவதற்கேற்ப
நல்ல பாதையுள்ளது. விளக்கு வசதிகள் உள்ளன. இதைச் சேர்ந்த
கிராமங்கள் சுற்றிலும் உள்ளன. அன்னக்காவடி விநாயகர்,